உள்ளடக்கத்துக்குச் செல்

இரகி சீவன் சர்னோபட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரகி சீவன் சர்னோபட்டு
Rahi Jeevan Sarnobat
துப்பாக்கிச் சுடும் வீராங்கனை
குடியுரிமைஇந்தியர்
விளையாட்டு
நாடுஇந்தியா
பதக்கத் தகவல்கள்
நாடு  இந்தியா
தங்கப் பதக்கம் – முதலிடம் {{{2}}} மகளிர்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் {{{2}}} கலப்பு

இரகி சீவன் சர்னோபட்டு (Rahi Jeevan Sarnobat) ஓர் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனையாவார். இவர் 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி பிறந்தார். 25 மீட்டர் கைத்துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

2013 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கி சுடுவோர் கூட்டமைப்பு நடத்திய உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன் பட்டப் போட்டியில் இவர் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 2019ஆம் ஆண்டு செருமனியின் முனிச் நகரத்தில் நடந்த பன்னாட்டு துப்பாக்கி சுடுவோர் கூட்டமைப்பு உலகக் கோப்பை வெற்றியின் மூலம் 2021ஆம் ஆண்டு டோக்கியோ கோடைகால ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார். ஆசிய விளையாட்டு மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை இவர் வென்றுள்ளார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி

[தொகு]

இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள கோலாப்பூரில் சர்னோபட் பிறந்தார். பள்ளி நாட்களில் தேசிய மாணவர் படை பயிற்சியின் ஒரு பகுதியாக துப்பாக்கிகளுக்கு அறிமுகமானார்.  சிறுவயதிலிருந்தே துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதில் தனது இயற்கையான திறன்களை வெளிப்படுத்தினார்.[2]

2006ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தனது பள்ளியைச் சேர்ந்த யசாசுவினி சாவந்த் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதை கவனித்தபின், சர்னோபட்டின் கவனம் தீவிரமாக துப்பாக்கிச்சுடுதல் பக்கம் திரும்பியது. சர்னோபட் முதன்முறையாக ஒரு துப்பாக்கியை எடுத்தபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்து அதுவே தனது வாழ்க்கையின் நோக்கம் என்று உணர்ந்தார்.[2]

துப்பாக்கிச்சுடுதல் பயிற்சியை தொடங்கிய ஆரம்ப நாட்களில், சர்னோபட்டு தனது சொந்த ஊரான கோலாப்பூரில் போதிய உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் இல்லாததை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனவே மும்பையில் பயிற்சி பெற முடிவு செய்தார்[2]

சாதனைகள்

[தொகு]
  1. 2008ஆம் ஆண்டு புனேவில் நடந்த இளைஞர் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 25 மீட்டர் துப்பாக்கிச் சூடு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
  2. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கி சுடுவோர் கூட்டமைப்பு உலகக் கோப்பையில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2012 ஆம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார்.
  3. 2013ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடந்த பன்னாட்டு துப்பாக்கி சுடுவோர் கூட்டமைப்பு உலகக் கோப்பையில் தங்கப் பதக்கம் வென்றார்.[3][4]
  4. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 25 மீட்டர் துப்பாக்கிச் சூடு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.[5] இதே ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[6]
  5. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் சர்னோபட்டு தங்கப்பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச்சுடுதலில் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.[7]
  6. 2018ஆம் ஆண்டில் துப்பாக்கிச்சுடுதலில் சாதனை புரிந்ததற்காக அவருக்கு அருச்சுனா விருது வழங்கப்பட்டது.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "துப்பாக்கி சுடுதல்: ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபட்". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
  2. 2.0 2.1 2.2 "பிபிசி இணையத்தளம்".
  3. "Women shooters break into the male bastion". India Today. 7 October 2010.
  4. "Sarnobat wins gold in shooting WC". The Hindu. 5 April 2013. https://www.thehindu.com/sport/other-sports/sarnobat-wins-gold-in-shooting-wc/article4585521.ece. பார்த்த நாள்: 8 October 2018. 
  5. "Pistol shooter Rahi Sarnobat wins gold, Anisa Sayyed silver". IANS. news.biharprabha.com. 26 July 2014. http://news.biharprabha.com/2014/07/pistol-shooter-rahi-sarnobat-wins-gold-anisa-sayyed-silver/. பார்த்த நாள்: 26 July 2014. 
  6. Mishra, Rashmi (22 September 2014). "Shooters Heena Sidhu, Rahi Sarnobat and Anisa Sayyed win 4th bronze for India in Asian Games 2014".
  7. Mishra, Rashmi (22 August 2018). "Rahi Sarnobat Wins Gold in 25 m Pistol Event, Manu Bows Out". The Quint.
  8. "Jitu Rai, Rahi recommended for Arjuna Awards by NRAI". http://timesofindia.indiatimes.com/sports/more-sports/shooting/Jitu-Rai-recommended-for-Arjuna-Awards-by-NRAI/articleshow/47200850.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரகி_சீவன்_சர்னோபட்டு&oldid=3306834" இலிருந்து மீள்விக்கப்பட்டது