உள்ளடக்கத்துக்குச் செல்

இயற்கையியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்கையியல் என்பது இயற்கையின் விதிகளும் ஆற்றல்களுமே அண்டத்தை இயக்குகின்றன என்றும், அதை மீறி மீவியற்கையாக எதுவும் இல்லை என்ற நிலைப்பாடு ஆகும்.[1] "முள்ளிற்கு கூர்மையும், செடிக்கு பசுமையும், கதிரவனுக்கு வெப்பமும் தன்னியல்பு". அறிவியலின் விதிகள் இயற்கை விதிகளே. இயற்கைவியல் கோட்பாட்டினை இறைவன், சாத்தான் போன்ற மீவியற்கை நம்பிக்கைகளோடு ஒப்பிட்டு வேறுபாடு காணலாம். இயற்கையியல் ஆதரவாளர்கள் இயற்கை விதிகள் இயற்கை அண்டத்தின் நடத்தையையும் கட்டமைப்பினையும் இயக்குகின்றன எனவும் அண்டம் அவ்விதிகளை உற்பவித்துள்ளது என உறுதியாகக் கூறுகின்றனர்.[2]

மெய்யியலாளர் போல் கேர்ட்சு பெளதீக அடிப்படைகளைக் குறிப்பிட இயற்கையே சிறந்த பதில் என வாதிடுகிறார். இவ்வடிப்படைகள் திணிவு, ஆற்றல் மற்றும் ஏனைய பெளதீக மற்றும் வேதியல் உடைமை ஆகியவற்றைக் கொண்ட அறிவியல் சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், இயற்கையியல் அறிவு ஆவி, பேய், பூதம் என்பன உண்மையல்லவெனவும், இயற்கையில் "நோக்கத்திற்காககப் படைக்கப்பட்டது" என்று ஒன்று இல்லையெனவும் குறிப்பிடுகின்றது. இவ்வாறான வரம்பற்ற நம்பிக்கை "மீவியற்பிய இயற்கையியல்" அல்லது "பெளதீக அதீத இயற்கையியல்" அல்லது "மெய்யியலியல் இயற்கையியல்" என அழைக்கப்படுகின்றது.[3]

உசாத்துணை

[தொகு]
  1. Oxford English Dictionary Online naturalism Subscription needed, possibly via a library.
  2. "CATHOLIC ENCYCLOPEDIA: Naturalism". 21 November 2009. பார்க்கப்பட்ட நாள் 6 March 2012. Naturalism is not so much a special system as a point of view or tendency common to a number of philosophical and religious systems; not so much a well-defined set of positive and negative doctrines as an attitude or spirit pervading and influencing many doctrines. As the name implies, this tendency consists essentially in looking upon nature as the one original and fundamental source of all that exists, and in attempting to explain everything in terms of nature. Either the limits of nature are also the limits of existing reality, or at least the first cause, if its existence is found necessary, has nothing to do with the working of natural agencies. All events, therefore, find their adequate explanation within nature itself. But, as the terms nature and natural are themselves used in more than one sense, the term naturalism is also far from having one fixed meaning.
  3. Paul Kurtz, Darwin Re-Crucified Darwin Re-Crucified: Why Are So Many Afraid of Naturalism? Free Inquiry(Spring 1998), 17
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கையியல்&oldid=2220928" இலிருந்து மீள்விக்கப்பட்டது