இந்தியத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் - 1952
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்-1952 (The Employees Provident Funds Act – 1952) என்பது இந்தியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பயனளிக்கும் விதமாக தொடங்கப்பட்ட திட்டமாகும். இதனால் தொழிலாளர்களுக்கு ஓய்வின் போது அவர்களது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்புத் தொகையும், மாத ஓய்வூதியம் ஆகியவை அளிக்கப்படுகின்றன. இந்தச் சட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு வருங்காலத்திற்கான ஒரு சேமிப்பும், ஓய்வூதியமும் அளிக்கப்படுவதால் எதிர்காலம் குறித்த பயம் இல்லாமல் இருக்க முடிகிறது.
சட்டம் பொருந்தும் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள்
[தொகு]இந்தியாவில் இருக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தால் அட்டவணைப்படுத்தப்பட்ட தொழில்களில் முதல் அட்டவணையில் வரும் 160 தொழில்கள் செய்துவரும் தொழில் நிறுவனங்கள் இச்சட்டத்தின் கீழ் வருகின்றன. இந்நிறுவனங்களில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்தால் மட்டுமே இச்சட்டம் நடைமுறைப்படுத்த முடியும். மேலும் இந்நிறுவனங்களில் மாதச்சம்பளம் ரூ15,000/-க்குக் குறைவாக சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு மட்டுமே வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படும் [1]
வருங்கால வைப்புநிதி சார்ந்த திட்டங்கள்
[தொகு]வருங்கால வைப்பு நிதித் திட்டத்தைச் சார்ந்து மூன்று திட்டங்கள் செயல் படுத்தப்படுகிறது. இதை இந்திய அரசு "தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்" மூலம் செயல்படுத்தி வருகிறது.[2]
- தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதித் திட்டம்
- தொழிலாளர்கள் ஓய்வூதியத் திட்டம்[3]
- தொழிலாளர்கள் குடும்பநல ஓய்வூதியத் திட்டம்
- தொழிலாளர்கள் வைப்புத் தொகையுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.dailythanthi.com/News/India/2014/08/29032203/WorkersFutureDepositFundMonthly-salaryCeilingRs-15.vpf தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் மாத சம்பள உச்சவரம்பு ரூ.15 ஆயிரம் ஆக உயர்வு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.1000 ஆகிறது
- ↑ http://www.epfindia.gov.in/
- ↑ http://www.dailythanthi.com/News/India/2014/08/29032203/WorkersFutureDepositFundMonthly-salaryCeilingRs-15.vpf
வெளியிணைப்புக்கள்
[தொகு]- EPFO's Main website
- EPFO Kerala state website
- EPFO Vashi website பரணிடப்பட்டது 2009-04-17 at the வந்தவழி இயந்திரம்
- EPFO Rohtak website பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்
- EPFO Chennai website பரணிடப்பட்டது 2011-02-16 at the வந்தவழி இயந்திரம்
- EPFO Pune website பரணிடப்பட்டது 2009-02-21 at the வந்தவழி இயந்திரம்
- EPFO Vadodara Region (Vadodara, Surat, Vapi) website பரணிடப்பட்டது 2018-10-05 at the வந்தவழி இயந்திரம்
- EPFO Ahmedabad website
- Social Security Now – social security campaign in India