உள்ளடக்கத்துக்குச் செல்

இண்டர்வியூ தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இண்டர்வியூ தீவு Interview Island is located in இந்தியா
இண்டர்வியூ தீவு Interview Island
இண்டர்வியூ தீவு
Interview Island
இந்தியப் பெருங்கடலில் இண்டர்வியூ தீவை காட்டும் வரைபடம்

இண்டர்வியூ தீவு (Interview Island) என்பது இந்தியாவின் அந்தமான் தீவுகளைசேர்ந்த ஒரு தீவாகும். இதன் பரப்பளவு 99 கி.மீ2 இத்தீவு ஆஸ்டின் நீர்சந்தியின் மேற்கே வடக்கு அந்தமான் மற்றும் நடு அந்தமான் ஆகிவற்றில் இருந்து விலகியுள்ளது. இத்தீவில் 70 முதல் 100 வரையிலான யானைகள் உள்ளன. இவை தீவில் வேலை செய்ய கொண்டுவரப்பட்டவை. இத்தீவு மாயா பந்தரில் இருந்து 3 மணிநேர பயண தூரத்தில் உள்ளது.

இத்தீவின் கலங்கரை விளக்கம் 2004 இந்திய பெருங்கடல் நில நடுக்க ஆழிப்பேரலையால் பெரும்பகுதி பாதிக்கப்பட்டது. இதைப்போலவே கச்சால் கிழக்கு தீவு, கச்சால் மேற்கு, இந்திரா முனை கலங்கரை விளக்கம் ஆகியவையும் பாதிப்புக்கு உள்ளாயின. இந்த கலங்கரை விளக்கங்கள் முற்றிலும் அழிந்ததாக அறிவிக்கப்பட்டது.[1] ஆனால் பிறகு இவை சரிசெய்யப்பட்டன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lighthouses in Andaman & Nicobar and the 26 Dec 2004 earthquake
  2. "Lighthouses of India: Andaman and Nicobar Islands". Archived from the original on 2018-03-15. பார்க்கப்பட்ட நாள் 2016-04-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டர்வியூ_தீவு&oldid=3543477" இலிருந்து மீள்விக்கப்பட்டது