இணைய சேவைகள் தொழில்நுட்பம்
இணைய சேவைகள் தொழினுட்பம் (Internet services technology) என்பது பரவலாக உள்ள ஒரு படிப்பாகும். இது ஒரு துணைப் படிப்பு ஆகும். இது இரண்டு ஆண்டுகள் படிக்கவேண்டிய படிப்பாகும். இது பெரும்பாலும் சமுதாயக் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது, இது சிறப்புப் படிப்புகளுக்கான நுழைவாயிலாகவும் உள்ளது, ஆனால் உடனடி பணியிட கோரிக்கைகளுக்கு இது பொருந்தும். இதில் பொதுவாக HTML, சி++ , ஆக்சன் ஸ்கிரிப்ட், ஜாவாஸ்கிரிப்ட் போன்ற கணினி மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இது இ-காமர்ஸ் மற்றும் பருப்பொருளியல் போன்ற வணிக படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.[1]
இப்படிப்பு இணைய சேவைகள் தொழினுட்பம் இணைய தொழில்நுட்பங்கள், இணையத்தொடக்கம், இணையசேவைகள் மற்றும் இ- காமர்ஸ் ஆகிய அனைத்து தளங்களையும் தன்னுள்ளே கொண்டது. மேலும் இது இணைய நிரலாக்கம், வலைதள கண்காணிப்பு, இணையதள வடிவமைப்பு, வலை நிபுணத்துவம் போன்றவற்றையும் தன்னுள் அடக்கியது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "What Will I Learn in an Internet Technology Degree Program?". Learn.org. பார்க்கப்பட்ட நாள் 5 December 2018.