இசுக்கார்பரோ மருத்துவமனை
இசுக்கார்பரோ மருத்துவமனை, பொதுப் பிரிவு | |
அமைவிடம் | இசுக்கார்பரோ, டொரோண்டோ, ஒன்டாறியோ, கனடா |
---|---|
மருத்துவப்பணி | மருத்துவ கவனிப்பு |
வகை | சமூகம் |
அவசரப் பிரிவு | உள்ளது |
படுக்கைகள் | 556 |
நிறுவல் | 1956 |
வலைத்தளம் | இசுக்கார்பரோ மருத்துவமனை |
பட்டியல்கள் |
இசுக்கார்பரோ மருத்துவமனை (The Scarborough Hospital, TSH) கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்து ரொறன்ரோவின் புறநகர்ப்பகுதி இசுக்கார்பரோவில் அமைந்துள்ள ஓர் மருத்துவமனை குழுமம் ஆகும். கனடாவில் பலதரப்பட்ட சமுதாய மக்கள் வாழ்கின்ற பகுதியில் அைமந்துள்ள இந்த மருத்துவமனை பொது வளாகம் மற்றும் பிர்ச்மௌன்ட் வளாகம் (முன்னதாக கிரேசு வளாகம்) எனப்படும் இரு மருத்துவமனை வளாகங்களிலும் ஆறு துணை ஆய்விடங்களிலும் உயரிய தரத்தில் அமைந்த மருத்துவக் கவனிப்பை வழங்குகிறது.
மருத்துவமனை
[தொகு]ரொறன்றோவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இசுக்கார்பரோ மருத்துவமனை உலகின் பலதரப்பட்ட மக்களினங்கள் வாழ்கின்ற பகுதியில் அமைந்துள்ளது.[1] இது ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவிற்கு இணைக்கப்பட்டது.[2] இது ஓர் பொது வளாகத்தையும் பிர்ச்மௌன்ட் வளாகத்தையும் ஆறு துணை சமூக ஆய்விடங்களையும் கொண்டுள்ளது. கூழ்மப்பிரிப்பிற்கான வட்டார மையமாகவும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கான பராமரிப்பு மற்றும் மனநல மையமாகவும் விளங்குகிறது. குருதிக்குழாய் அறுவை சிகிச்சை, பேஸ்மேக்கர் மற்றும் கருவிழி பதித்தல் போன்ற சிகிச்சைகளுக்கு சுட்டி அனுப்பப்படும் மருத்துவமனையாகவும் உள்ளது.
சேவைகள்
[தொகு]2008/09இல் இசுக்கார்பரோ மருத்துவமனை ஏறத்தாழ 96,000 நெருக்கடிகால வருகைகளையும், 5,200 பிறப்புகளையும், 43,000 அறுவை சிகிச்சைகளையும் மேற்கொண்டது. இங்கு 3,400 ஊழியர்களும் 700க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் 600 தன்னார்வலத் தொண்டர்களும் பலதரப்பட்ட மருத்துவ சேவைகளை வழங்க உதவுகின்றனர்.[3]
பல்சமூக முனைப்புகள்
[தொகு]இந்த மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் பல நாடு/மொழி/சமய மக்கள் உள்ளதால் அவர்ளது நன்மைக்காக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன;
- 150க்கும் மேற்பட்ட பயிற்சிபெற்ற தன்னார்வலர்கள் 48 மொழிகளில் மொழிபெயர்ப்பு வழங்குகின்றனர்.
- அனைத்து பணியாளர்களும் பண்பாட்டு நோக்குடன் உணர்வுப்பூர்வ பராமரிப்பை வழங்க பயிற்சி பெறுகின்றனர்.
- ஒவ்வொரு சமயக்குழுவிற்கும் அனைத்து ஆன்மிக நம்பிக்கை கூடிய கவனிப்பு வழங்கப்படுகிறது.
- தீபாவளி, கிறித்துமசு, ஈத் திருநாள் போன்ற பல்வேறு சமயங்களின் திருவிழாக்களும் கொண்டாடப்படுகின்றன.
- ஆண்டுதோறும் அனைத்து சமயக்குழுவினரையும் ஒருங்கிணைக்கும் ஆன்னுவல் டைவர்சிடி டே கொண்டாடப்படுகிறது.
- வெளி அமைப்புகளான யீ ஹாங் மையம் மற்றும் தெற்காசிய குடும்ப ஆதரவு சேவைகள் ஒருங்கிணைந்து ஆசிய சமுதாயத்தினருக்கு சிறந்த கவனிப்பு வழங்கப்படுகிறது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ http://www.toronto.ca/attractions/attraction_highlights.htm
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-07-26. பார்க்கப்பட்ட நாள் 2013-04-12.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-02-21. பார்க்கப்பட்ட நாள் 2013-04-12.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- இசுக்கார்பரோ மருத்துமனையைப் பற்றி பரணிடப்பட்டது 2013-05-15 at the வந்தவழி இயந்திரம்
உசாத்துணைகள்
[தொகு]- "Key Facts & Figures 2009". The Scarborough Hospital. 16 February 2010. Archived from the original on 21 பிப்ரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 16 February 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - "City of Toronto Community Council Profiles" (PDF). City of Toronto. October 2008. பார்க்கப்பட்ட நாள் 16 February 2010.