ஆல்பா மற்றும் பீட்டா கார்பன்
.
ஆல்பா கார்பன் (Alpha carbon) என்பது கரிம மூலக்கூறுகளில் இடம்பெற்றுள்ள கார்பனைல் போன்ற செயல்பாட்டுக் குழுவுடன் இணைந்திருக்கும் முதல் கார்பன் அணுவைக் குறிக்கிறது. இதை Cα என்ற குறியீட்டால் குறிப்பர். இரண்டாவதாக இணைந்துள்ள கார்பன் அணுவை பீட்டா கார்பன் Cβ ) என்று அழைப்பர். இது Cβ என்ற குறியீடால் அடையாளப்படுத்தப்படுகிறது. மேலும் இந்த அமைப்பு கிரேக்க எழுத்துக்களுடன் அகர வரிசைப்படி பெயரிடுவதைத் தொடர்கிறது. கார்பன் அணுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஐதரசன் அணுக்களுக்கும் இப் பெயரிடலைப் பயன்படுத்தப்படலாம். ஆல்பா கார்பன் அணுவுடன் இணைக்கப்பட்ட ஓர் ஐதரசன் அணுவை ஆல்பா-ஐதரசன் அணு என்றும் பீட்டா-கார்பன் அணுவில் உள்ள ஒரு ஐதரசன் அணு பீட்டா ஐதரசன் என்றும் அழைக்கலாம். [1] .
இந்த பெயரிடும் தரநிலை ஐயுபிஏசி முறை பெயரிடலுடன் இணக்கமாக இருக்காது. கார்பன்களை கிரேக்க எழுத்துகளால் அடையாளப்படுத்துவதை விட எண்ணால் அடையாளம் காண வேண்டும் என்று ஐயுபிஏசி பெயரிடும் திட்டம் ஊக்குவிக்கிறது, ஆனாலும் கிரேக்க எழுத்து பெயரிடல் முறை மிகவும் பிரபலமாக உள்ளது. குறிப்பாக கார்பன் அணுக்களின் இருப்பிடத்தை மற்ற செயல்பாட்டு குழுக்களுடன் ஒப்பிட்டு அடையாளம் காண இம்முறை பயனுள்ளதாக இருக்கிறது என்பது இதற்கான காரணமாகும். . ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாட்டுக் குழுவைக் கொண்ட கரிம மூலக்கூறுகள் இக்குழப்பத்திற்கு மூலமாக இருக்கின்றன. பொதுவாக கரிம மூலக்கூறின் பெயர் அல்லது அதன் வகைக்கு பொறுப்பான செயல்பாட்டுக் குழு கார்பன் அணுவே பெயரிடும் நோக்கங்களுக்கான அடிப்படை ஆதாரக் குழுவாகும். உதாரணமாக நைட்ரோசிடைரீன் மற்றும் பீனெத்திலமீன் என்ற இரண்டு மூலக்கூறுகளும் ஒரேமாதிரியானவையாகும். நைட்ரோசிடைரீனை பீனெத்திலமீனாக ஒடுக்க முடியும். நைட்ரோசிடைரீனின் ஆல்பா கார்பன் அணு பீனைல் குழுவிற்கு அடுத்துள்ளது. பீனெத்திலமீனில் இதே கார்பன் பீட்டா கார்பன் அணுவாக உள்ளது. ஏனெனில் ஒரு சிடைரீன் என்பதற்கு பதிலாக ஓர் அமீன் என்ற நோக்கோடு பீனெத்திலமீனில் அணுக்களின் எண்ணிக்கையை எண்ணிடுவது மூலக்கூறுவின் எதிர் முனையிலிருந்து தொடங்குகிறது. [1]
-
நைட்ரோசிடைரீன்
-
பீனெத்திலமீன்
எடுத்துக்காட்டுகள்
[தொகு]புரதங்களும் அமினோ அமிலங்களும்
[தொகு]ஆல்பா-கார்பன் (α- கார்பன்) என்பது புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்களுக்கும் பொருந்தும் ஒரு சொல்லாகும். மூலக்கூறில் உள்ள கார்பனைல் கார்பன் அணுவுக்கு முன்னதாக இதுவே முதுகெலும்பு கார்பன் ஆகும். எனவே ஒரு பொதுவான புரதத்தின் முதுகெலும்பை நைட்ரசன் முதல் கார்பன் வரையாக வாசிப்பது - [N - Cα - கார்போனைல் சி] n– முதலியவற்றின் வரிசையைக் கொடுக்கும். ஒவ்வொரு வெவ்வேறு அமினோ அமிலத்திற்கும் வெவ்வேறு மாற்றீடுகள் இணைகின்ற போது ஆல்பா கார்பன் அணுக்கள் மாறுபடுகின்றன.
அதாவது, α- கார்பனில் சங்கிலியாகத் தொங்கும் குழுக்கள் அமினோ அமிலங்களுக்கு அவற்றின் பன்முகத்தன்மையைக் கொடுக்கின்றன. எனவே கிளைசின் தவிர்த்து பிற அமினோ அமிலங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆல்பா கார்பனே பன்முகநடுவமாக திகழ்கிறது. பிற அமினோ அமிலங்கள் ஒவ்வொன்றிலும் பீட்டா கார்பன் இடம்பெற்றிருந்தாலும் கிளைசின் மூலக்கூறில் பீட்டா கார்பன் கிடையாது. ஓர் அமினோ அமிலத்தின் α- கார்பன் புரத மடிப்புகளில் குறிப்பிடத்தக்கதாகும். அமினோ அமிலங்களின் சங்கிலியான ஒரு புரதத்தை விவரிக்கும் போது, ஒவ்வொரு அமினோ அமிலத்தின் இருப்பிடத்தையும் அதன் α- கார்பனின் இருப்பிடமாக ஒருவர் தோராயமாக மதிப்பிடுகிறார். பொதுவாக, ஒரு புரதத்தில் அருகிலுள்ள அமினோ அமிலங்களின் α- கார்பன்கள் சுமார் 3.8 ஆங்சுடிராங்கு (380 பைக்கோமீட்டர்கள்) அளவில் இருக்கின்றன.
ஈனோல்களும் ஈனோலேட்டுகளும்
[தொகு]ஈனோல், ஈனோலேட்டு அடிப்படையிலான கார்பனைல் சேர்மங்களுக்கும் ஆல்பா கார்பன் முக்கியமானதாகும். ஈனோல் அல்லது ஈனோலேட்டாக மாற்றும்போது வேதியியல் மாற்றங்கள் இதனால் பாதிப்படைகின்றன. பொதுவாக ஆல்பா கார்பனை இவை மின்னணு மிகுபொருளாக செயல்படவைக்கின்றன. முதல்நிலை ஆலோ ஆல்கேன் முன்னிலையில் இவை ஆல்கைலேற்றம் அடைவது இதற்கு உதாரணமாகும். சிலில் குளோரைடுகள், புரோமைடுகள், அயோடைடுகள் முதலானவற்றுடன் ஈடுபடும் வேதிவினைகள் இதற்கு விதிவிலக்காகும். இவ்வினையில் ஆக்சிசன் ஒரு மின்னணு மிகுபொருளாகச் செயல்பட்டு சிலில் ஈனோல் ஈதரைக் கொடுக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nomenclature". Ask Dr. Shulgin Online. பார்க்கப்பட்ட நாள் August 5, 2010.
புற இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் ஆல்பா மற்றும் பீட்டா கார்பன் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.