ஆரண்யா ஜோகர்
ஆரண்யா ஜோகர் (Aranya Johar பிறப்பு செப்டம்பர் 7, 1998) ஓர் இந்தியக் கவிஞர் ஆவார். பாலின சமத்துவம், மன ஆரோக்கியம் மற்றும் நேர்மறை உடலியல் போன்ற பிரச்சினைகளுக்கு இவர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தனது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். [1] அழகுத் தரங்களை எதிர்கொள்ள இவர் சிலாம் கவிதையைப் பயன்படுத்துகிறார். [2] ஆரண்யாவின் முதல் படைப்பான "எ பிரவுண் கேர்ள்சு கைடு டூ ஜெண்டர்" பதிவேற்றப்பட்ட இரண்டு நாட்களில் 1 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. [3] ' பேட்மேன் ' திரைப்படத்திற்காக அக்ஷய் குமாரின் ஒத்துழைப்பு மூலம் இவர் முதன்முதலில் பாலிவுட்டில் பேசும் வார்த்தையை ஒருங்கிணைத்தார். [4] ஆரண்யா ஏப்ரல் 2017 இல் மும்பையில் நடைபெற்ற டெட் மாநாட்டில் பேச்சாளராக இருந்தார். [5] மிசெல் ஒபாமா மற்றும் ஆசுலே கிரகாம் ஆகியோருடன் சமூக ஊடகங்களில் ஒருவர் பின்பற்ற வேண்டிய 10 பெண்களின் பட்டியலில் இவர் பரிந்துரைக்கப்படுகிறார். [6]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]ஆரண்யா 8 செப்டம்பர் 1998 இல் பிறந்தார் மற்றும் மும்பையில் வளர்ந்தார். லீலாவதி போதார் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். [7] இவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்த சிலாம் கவிதையைப் பயன்படுத்துகிறார். சிலாம் கவிஞர்கள் பேசுவதற்கான சொற்களைப் பயன்படுத்தவும், அடையாளத்தை வெளிப்படுத்தவும் மற்றும் தங்கள் பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ளவும் இதனைப் பயன்படுத்துகின்றனர். [8]
தொழில்
[தொகு]ஆரண்யா தனது பதின்ம வயதிலிருந்தே தவறான கருத்துகள் பற்றிய கவிதைகளை எழுதத் தொடங்கினார். [9] ஆரண்யா தனது 12 வயதில் பார்வையாளர்கள் முன்னிலையில் முதல் முறையாக நடித்தார்.அதில் கலந்துகொள்வதற்காக தனது வயதினை தவறாகக் கூறினார், இவளுடைய அம்மா இவளுடன் வருவார் என்று இவர் ஒப்புக்கொண்டார். இவர் ஏழாம் வகுப்பில் இருந்தபோது இவருக்கு கவனக் குறைபாடு கோளாறு (ADD) இருப்பது கண்டறியப்பட்டது. [10] அதனால் இவள் மன ஆரோக்கியத்தைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க ஊடகத்தைப் பயன்படுத்துகிறார். இவர் மனநிலை குறித்து ஆராய்ந்து அதைப் பற்றி எழுதுகிறாள்.
ஆரண்யா மற்றும் இவரது 17 வயது நண்பர் பிரசீ மஷ்ரு ஆகியோர் இவருக்கு உறுதுணையாக இருந்தனர். இவர் மைக் எனும் நிறுவனத்தை விட அதிகமாக தனக்கு உதவியதாக கூறினார். மைக் நிறுவனம் கலை நிகழ்ச்சிகளுக்கான படைப்பு தளங்களை (கவிதை, இசை, நகைச்சுவை போன்றவை) நிர்வகிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. ) [11] மஷ்ரு விலே பார்லே (டபிள்யூ) இல் உள்ள ஒரு பள்ளியில் படிக்கிறார், ஆனால் இவர்கள் எழிவரி மூலம் பழகி நண்பர்களாகினர்.கனேடிய பரப்பிசைப் பாடகரான டிரேக்கின் மீதான அன்பின் மீது பிணைக்கப்பட்டனர். [12]
பார்வையற்ற கவிதை அமர்வுகள், கவிதை இரவுகளின் தொடர் கண்காணிப்பாளராகவும் ஆரண்யா உள்ளார். மற்ற நிகழ்ச்சிகளைப் போலல்லாமல், பார்வையற்ற கவிதை இரவு இருண்ட அறையில் நடைபெறுகிறது, மற்றும் கவிஞர்கள் அநாமதேயர்களாக உள்ளனர். த்ரோபேக் வியாழன் என்ற தலைப்பில் நகரத்தின் மற்றொரு கவிதை நிகழ்வின் இணை கண்காணிப்பாளராகவும் உள்ளார், அதில் கவிஞர்கள் தங்கள் முதல் படைப்பு மற்றும் இவர்களின் சமீபத்திய எழுத்துக்களைப் படிக்கச் சொல்கிறார். ஆஜ் தக் மற்றும் இந்தியா டுடே ஆகியவற்றுடன் இணைந்து விவேலின் உங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள், எனும் பெயரில் பாலின சமத்துவத்திற்கான ஒரு கவிதையையும் இவர் ஆதரித்து வழங்கினார். [13] "டூ பிளீடு வித் இவுட் எ வயலன்சு" எனும் பெயரில் வாஷ்யுனைடெட்டுடன் ஆரண்யா இணைந்து வெளியிட்ட நிகழ்படம் , பதிவேற்றிய வார இறுதியில் 7 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. ஹைதராபாத் சர்வதேச மாநாட்டு மையத்தில் 2017 இல் ஹார்வர்ட் மாடல் ஐக்கிய நாடுகள் சபையின் இளம் ஆர்வலர்களுக்காக இவர் தனது கவிதையையும் வாசித்தார். [14]
சான்றுகள்
[தொகு]- ↑ "Aranya Johar on Instagram: "Feature in this month's @bazaarindia ! So grateful! 🙆💕"". Instagram (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-01.
- ↑ "This Indian Teenager Is Using Slam Poetry To Confront Beauty Standards". https://www.refinery29.com/en-us/2017/07/162838/aranya-johar-brown-girls-guide-to-beauty-slam-poetry.
- ↑ "'Brown Girl's Guide to Gender' Strikes a Note with Every Woman". https://www.thequint.com/neon/social-buzz/brown-girl-guide-to-gender-speaks-for-all-women-who-cant-poetry-gender-discrimination.
- ↑ "Akshay kumar with Aranya Johar Tears Apart Our Society's Notion About Periods In This Slam Poem !" இம் மூலத்தில் இருந்து 2021-09-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210930161554/https://www.theindianfeed.in/akshay-kumar-with-aranya-johar-tapes-the-menstrual-poetry-bleeding-rani/.
- ↑ "TEDxICTMumbai | TED". www.ted.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-01.
- ↑ "10 Women You Must Follow On Social Media". http://dubeat.com/2018/02/10-women-you-must-follow-on-social-media/.
- ↑ "::: Lilavatibai Podar School - Newsletter". www.lilavatibaipodarschool.com. பார்க்கப்பட்ட நாள் 2018-11-01.
- ↑ "slam poetry | Definition, History, & Facts"..
- ↑ "This Indian Teenager Is Using Slam Poetry To Confront Beauty Standards" (in en). https://www.refinery29.com/en-us/2017/07/162838/aranya-johar-brown-girls-guide-to-beauty-slam-poetry.
- ↑ "::: Lilavatibai Podar School - Newsletter". www.lilavatibaipodarschool.com. பார்க்கப்பட்ட நாள் 2018-11-01.
- ↑ "Aranya Johar" (in en-GB). Espérance. 2017-04-28 இம் மூலத்தில் இருந்து 2018-02-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180218194337/http://www.umangfoundationtrust.org/esperance/2017/04/28/aranya-johar/.
- ↑ "From better to verse". Mumbai Mirror. https://mumbaimirror.indiatimes.com/others/sunday-read/from-better-to-verse/articleshow/56844893.cms.
- ↑ Vivel (2017-08-28), Aranya Johar supports Gender Equality. Know Your Rights #AbSamjhautaNahin, பார்க்கப்பட்ட நாள் 2018-11-01
- ↑ Worldview Education (2017-10-26), The MUN Anthem | Aranya Johar | HMUN India 2017 | Poetry, பார்க்கப்பட்ட நாள் 2018-11-01