உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதர்ச வீட்டுவசதி சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதர்ச வீட்டுவசதி சங்கம் (Adarsh Housing Society) இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பையில் போர் விதவைகளுக்கும் கார்கில் போரில் பங்கெடுத்த படைவீரர்களுக்கும் வீட்டுவசதி அமைத்துக்கொடுக்க ஏற்பட்ட ஓர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கமாகும்.இந்தச் சங்கம் தனது நோக்கத்திற்காக அடுக்ககங்கள் கட்டும்போது பல கட்டங்களில் விதிமுறைகளை மீறியதும் இவ்வாறு விதிமுறைகளை மீற உதவிய அரசியல்வாதிகள், அரசு/படை அதிகாரிகளுக்கு இந்த அடுக்ககங்களில் வீடு ஒதுக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளது.[1][2] இதன் பின்னணியில் மகாராட்டிர முதல்வராக இருந்த அசோக் சவான் பதவி விலக நேரிட்டது.

விவரம்

[தொகு]

ஆதர்ச வீட்டுவசதிச் சங்கம் மும்பையின் செல்வந்தர்கள் மிகுந்த கொலாபா பகுதியில், இந்தியக் கடற்படையும் பாதுகாப்புப்படைகளின் பல அமைப்புகளும் நிறைந்த பலவீனமான கடற்கரைப் பகுதியில்,வானுயர் கட்டிடங்கள் கட்டியுள்ளது.[3] இது கடற்கரையோர கட்டுப்பாடு விதிமுறைகளுக்குப் புறம்பாக இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது.[4] துவக்கத்தில் போர்வீரர்களுக்கும் போர்விதவைகளுக்கும் மட்டுமே என்று இருந்த சங்க விதிகள் 40% குடிமக்களுக்கும் என அசோக் சவான் வருமான அமைச்சராக இருந்தபோது மாற்றப்பட்டது. இந்த விதிமீறல்களை பல தன்னார்வலர்கள் பலகாலமாக வெளிப்படுத்தப் போராடி வந்தனர்.[5] இங்கு பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர்களாகப் பொறுப்பேற்றிருந்த படைத்தலைவர்கள் இந்தக் கட்டிடங்கள் கட்டுவதற்கு "மறுப்பின்மைச் சான்றிதழ்" வழங்க இங்கு வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள்; கட்டிட விதிமுறை மீறல்களை முறைப்படுத்த வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அரசியல்வாதிகள்,அரசு அதிகாரிகள்,கட்டுநர்கள் இவர்களிடையே இருந்த தீநட்பு மிக வலியதாக இருந்தது.[6]

இதனை ஆய்வுசெய்ய அரசு மற்றும் படைத்துறை பல விசாரணைக்குழுக்களை நியமித்துள்ளன.[7] தங்களுக்கும் இந்த சர்ச்சைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தங்கள் வீடுகளை திருப்பித்தர சிலர் ஒப்பி யுள்ளனர்.[8] இது குறித்த விவாதங்கள் மக்களவையில் நிகழ்ந்தபோது பிரதீப் வியாசு என்ற அரசு அதிகாரி அவைக்குத் தவறான தகவல் கொடுத்ததாகவும் ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேசு இந்த 31 மாடிக் கட்டிடத்தை இடிக்க நவம்பர் 12, 2010 அன்று "காரணம் கேட்கும் குறிப்பாணை" கொடுத்துள்ளார்.கட்டிடத்தை முறைப்படுத்துவதைத் தவிர பிற சட்டபூர்வ மாற்றுவழிகளை கருத்தில் கொள்ள அமைச்சர் இசைந்திருக்கிறார்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gen Vij favours probe into Adarsh housing society scam". டெக்கன் ஹெரால்டு. PTI. 30 October 2010 இம் மூலத்தில் இருந்து 15 November 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5uFaiz5Sk?url=http://www.deccanherald.com/content/109055/gen-vij-favours-probe-adarsh.html. பார்த்த நாள்: 15 November 2010. 
  2. "Chavan asked Adarsh society to change bye-laws: Deshmukh". தி இந்து. PTI. 1 November 2010 இம் மூலத்தில் இருந்து 15 நவம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5uFaxUGu0?url=http://www.thehindu.com/news/national/article863424.ece. பார்த்த நாள்: 15 November 2010. 
  3. "Criminal conspiracy in Adarsh highrise case: Def Min probe". டெக்கன் ஹெரால்டு. PTI. 29 October 2010 இம் மூலத்தில் இருந்து 15 நவம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5uFb92ccC?url=http://www.deccanherald.com/content/108752/criminal-conspiracy-adarsh-highrise-case.html. பார்த்த நாள்: 15 November 2010. 
  4. Pachouly, Manish (9 November 2010). "‘Didn’t give eco clearance’". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 15 நவம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5uFbOr1Uo?url=http://www.hindustantimes.com/Didn-t-give-eco-clearance/Article1-623706.aspx. பார்த்த நாள்: 15 November 2010. 
  5. "Parliament was misled on Adarsh issue: Medha". தி இந்து. 2 November 2010 இம் மூலத்தில் இருந்து 15 நவம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5uFbZJlwl?url=http://www.thehindu.com/news/states/other-states/article863611.ece. பார்த்த நாள்: 15 November 2010. 
  6. Menon, Vinod Kumar (31 October 2010). "'Adarsh housing controversy is just tip of the nexus iceberg'". மிட் டே இம் மூலத்தில் இருந்து 15 நவம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5uFbq2xKE?url=http://www.mid-day.com/news/2010/oct/311010-adarsh-housing-society-scandal-cm-ashok-chavan-resignation-whistleblowers.htm. பார்த்த நாள்: 15 November 2010. 
  7. "Adarsh Society: Army setting up court of inquiry". தி இந்து. 1 November 2010 இம் மூலத்தில் இருந்து 15 நவம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5uFbxHzr3?url=http://www.thehindu.com/news/national/article863396.ece. பார்த்த நாள்: 15 November 2010. 
  8. "I have returned the Adarsh flat, says former Navy chief". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. PTI. 31 October 2010 இம் மூலத்தில் இருந்து 15 நவம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5uFc9gaES?url=http://timesofindia.indiatimes.com/articleshow/6843467.cms. பார்த்த நாள்: 15 November 2010. 
  9. Sethi, Nitin (13 November 2010). "Adarsh put on notice, all 31 floors may be razed". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 15 நவம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5uFcb0vrk?url=http://timesofindia.indiatimes.com/articleshow/6916774.cms. பார்த்த நாள்: 15 November 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதர்ச_வீட்டுவசதி_சங்கம்&oldid=3414337" இலிருந்து மீள்விக்கப்பட்டது