அசோக் சவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அசோக் சங்கர்ராவ் சவான் (மராத்தி: अशोक चव्हाण) (பிறப்பு 28 அக்டோபர் 1958 (1958-10-28) (அகவை 65))[1] முன்னாள் மகாராட்டிர முதலமைச்சராவார். மும்பை தீவிரவாத நிகழ்வின் பின்னணியில் விலாசராவ் தேசுமுக்கின் பதவிவிலகலை அடுத்து கடந்த 8 திசம்பர் 2008 அன்று சவான் பதவியேற்றார். கலாசாரம், தொழிற்துறை, சுரங்கங்கள் மற்றும் நெறிமுறை அமைச்சுகளை தன்னகத்தே கொண்டுள்ளார். முன்னாள் மகாராட்டிர முதலமைச்சரான சங்கர்ராவ் சவான் எஸ். பி.சவானின் மகனாவார்.[2]

அக்டோபர் 2009ஆம் ஆண்டு நடந்த மாநிலப் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் காங்கிரசு-தேசிய காங்கிரசின் கூட்டணி ஆட்சிக்குத் தலைமையேற்று 7 நவம்பர் 2009 அன்று மகாராட்டிர முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.[3]

ஆதர்சு குடியிருப்புச் சங்கம்[தொகு]

மும்பையில் ஆதர்சு குடியிருப்புச் சங்க ஊழல் புகார்களை அடுத்து தமது முதலமைச்சர் பதவியிலிருந்து நவம்பர் 09, 2010 அன்று விலகினார். இவரையடுத்து பிரித்திவிராசு சவான் மகாராட்டிர முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

விஞ்ஞானத்தில் பட்டப்படிப்பினைத் தொடர்ந்து வணிக மேலாண்மையில் பட்டமேற்படிப்பு படித்துள்ளார்.[4]. தனது அரசியல் வாழ்வை மகாராட்டிர பிரதேச காங்கிரசின் பொது செயலாளராகத் தொடங்கினார். 87-88 ஆண்டுகளில் நாந்தேடு மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992இல் மகாராட்டிர மேலவைக்கு சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1993இல் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை,மற்றும் உள்துறை அமைச்சுகளில் துணை அமைச்சராகப் பணியாற்றினார். 2003இல், அவர் போக்குவரத்து, துறைமுகங்கள், கலாசார விவகாரங்கள் மற்றும் நெறிமுறை அமைச்சரானார். 1995 - 1999 காலகட்டத்தில் மகாராட்டிர மாநில காங்கிரசு பொது செயலாளராக பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_சவான்&oldid=3626444" இருந்து மீள்விக்கப்பட்டது