ஆஜியஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரேக்கத் தொன்மங்களில், ஆஜியஸ் (Augeas அல்லது Augeias, ), "பிரகாசமான" என்று பொருள்படும் இந்தப் பெயரானது, ஈலிஸின் அரசரும், எபிகாஸ்டின் தந்தையும் ஆவார். கிரேக்க தொன்னங்களில் குறிப்பிடப்படும் வீரர் குழுவான .ஆர்கோனாட்சில் ஆஜியசும் ஒருவர் என்று சிலர் கூறுகிறார்கள். [1] இவர் தனது தொழுவத்துக்களுக்காக மிகவும் புகழ்பெற்றவர். இவர் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கால்நடைகளை வைத்திருந்தார். மேலும் இந்தக் கால்நடைத் தொழுவமானது சிறந்த வீரரான ஹெராக்கிள்ஸ் காலம் வரை சுத்தம் செய்யப்படாமல் இருந்தது.

குடும்பம்[தொகு]

ஆஜியசின் குடிவழி குறிப்புகள் வேறுபடுகின்றன: இவர் ஹீலியோஸ் மற்றும் நௌசிதேமின் மகன் [1] அல்லது எலிஸின் மன்னரான எலியோஸ், நௌசிதேம், [2] அல்லது பொசைடன், [3] அல்லது போர்பாஸ் மற்றும் ஹைர்மினின் மகன் என்று கூறப்பட்டது. இவருக்கு எபிகாஸ்ட், பைலஸ், அகமேட் அகஸ்தீனஸ், யூரிடஸ் ஆகிய பிள்ளளைகள் இருந்தனர். [4]

தொன்மம்[தொகு]

ஆஜியனின் தொழுவத்தை சுத்தம் செய்வதற்காக ஆல்பியஸ் மற்றும் பெனியஸ் நதிகளை திருப்பிவிடும் ஹெராக்கிள்ஸ். உரோமன் மொசைக் தரைக் கற்கள், கி.பி 3 ஆம் நூற்றாண்டு.

ஹெர்குலசுக்கு வழங்கப்பட்ட ஐந்தாவது வேலையாக ஆஜிசின் தொழுவத்தை ஹெர்குலஸ் சுத்தம் செய்யவேண்டும் என்பதாகும். ஹெராக்கிள்சுக்கு இந்த வேலையை அளித்த யூரிஸ்டீயஸ் இந்த வேலையானது அவமானகரமானதாகவும் (முந்தைய வேலைகளைப் போல சுவாரசியமற்றதாகவும்) செய்ய சாத்தியமற்றது என்றும் கருதினார். ஏனெனில் இந்தக் கால்நடைகள் தெய்வீகதன்மையால் நோய்கள் அண்டாமல் ஆரோக்கியமானவையாக (அழியாதவை) இருந்தன. எனவே அவை ஏராளமான சாணத்தை உற்பத்தி செய்தன. முப்பது ஆண்டுகளாக இந்த தொழுவங்கள் சுத்தம் செய்யப்படவில்லை, 3,000 கால்நடைகள் அங்கு வாழ்ந்தன. இருப்பினும், ஹெராக்கிள்ஸ் ஆல்பியஸ் மற்றும் பெனியஸ் ஆறுகளை திசைமாற்றி பாயவைப்பதன் மூலமாக தொழுவத்தை சுத்தம்செய்து இப்பணியை முடித்தார்.

ஒரே நாளில் இந்த வேலையை முடிந்தால் ஆஜியஸ் தனது கால்நடைகளில் பத்தில் ஒரு பங்கை அளிப்பதாக ஹெராக்கிள்சுக்கு வாக்குறுதியளித்திருந்தார். ஆனால் பணியை முடித்தபின்பு தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மறுத்துவிட்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் ஹெராக்கிள்ஸ் இவரைக் கொன்றார். ஹெராக்கிள்ஸ் அந்த நாட்டை ஆஜியசின் மகனான பிலியசுக்கு வழங்கினார், அவர் தனது தந்தைக்கு எதிராக ஹெராக்ஸை ஆதரித்ததற்காக நாடுகடத்தப்பட்டிருந்தார்.

ஹெராக்கிள்ஸ் முடித்த இந்த பணியின் வெற்றியை யூரிஸ்டியஸ் தள்ளுபடி செய்தார். ஏனென்றால் விரைந்து செல்லும் ஆற்று நீரே தொழுவத்தை சுத்தம் செய்தது. இதற்கு ஹெராக்கிள்ஸுக்கு ஊதியமும் வழங்கப்பட்டது. எனவே ஹெராக்கிள்ஸுக்கு இன்னும் ஏழு பணிகள் உள்ளன என்று கூறி, யூரிஸ்டீயஸ் பின்னர் இசுடிம்பலீயன் பறவைகளை தோற்கடிக்க அனுப்பினார்.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Hyginus. Fabulae 14
  2. Pausanias, Graeciae Descriptio 5.1.9
  3. Pseudo-Apollodorus, Bibliotheca 2.88
  4. Diodorus Siculus, Bibliotheca historica 4.33.3
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஜியஸ்&oldid=3067692" இலிருந்து மீள்விக்கப்பட்டது