இசுடிம்பலீயன் பறவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுடிம்பலீயன் பறவைகள்
இசுடிம்பலீயன் பறவைகளும் எர்க்குலிசும்
குழுபழங்கதை உயிரினம்
உப குழுபறவைகள்
தொன்மவியல்கிரேக்கத் தொன்மவியல்
நாடுகிரேக்கம்
பிரதேசம்ஆர்க்காடியா
வாழ்விடம்இசுடிம்பதீலியா ஏரி

இசுடிம்பலீயன் பறவைகள் என்பவை கிரேக்கத் தொன்மவியலில் காணப்பட்டு வந்த பறவைகளின் கூட்டம் ஆகும். இசுடிம்பலீயா எனும் ஏரி அல்லது சதுப்புநிலத்தின் அருகில் உள்ள மரங்களில் இவை வாழ்ந்து வந்தன. இவை ஆயிரக்கணக்காக கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தன. இவை மனிதர்களையும் உண்ணக்கூடிய மிகவும் கொடிய பறவைகளாகக் கூறப்பட்டுள்ளது. இவற்றின் அலகு வெண்கலத்தினாலும் இறகுகள் பலம் வாய்ந்த உலோகத்தினாலும் செய்யப்பட்டது என நம்பப்படுகிறது..

தொன்மவியல்[தொகு]

எர்க்குலிசின் பன்னிரு வேலைகளில் ஆறாவதாக அவனுக்குக் கொடுக்கபட்ட வேலை மிகக் கொடிய இசுடிம்பலீயன் பறவைகள் கொல்வது அல்லது விரட்டி அடிப்பது என்பதாகும்.

எர்க்குலிசின் ஆறாம் வேலை[தொகு]

பறவைகள் வசித்து வந்த ஏரிப்பகுதியை எர்க்குலிசு வந்தடைந்தான். எந்தவித திட்டங்களோ முன்னேற்பாடுகளோ இன்றி வந்த அவனுக்கு ஏதெனா தெய்வம் தக்க தருணத்தில் வந்து உதவி செய்தாள். எர்க்குலிசிற்கு அவள் குரோடோலா எனப்படும் இரு பாரிய தட்டுக்களை வழங்கினாள். இவற்றை இரு கைகள் மூலம் தட்டுவதனால் பாரிய ஓசையை எழுப்ப முடியும். இத்தட்டுகள் ஆயுதக் கடவுளான எப்பெசுடசுவினால் செய்யப்பட்டவையாகும். அருகில் உள்ள மலையினில் ஏறிய எர்க்குலிசு அவ்விரு பாரியதடுக்களையும் தட்டி மரத்தில் இருந்த பறவைகளை வெளிவரச் செய்தான். பின்னர் ஐதராவின் விஷம் தோய்ந்த அம்புகள் மூலம் அப்பறவைகளைத் தாக்கினான். அவனது தாக்குதலை எதிர்கொள்ள முடியாத பறவைகள் சில அவ்விடத்தைவிட்டு பறந்து சென்றதுடன் பல்வேறு பறவைகள் இறந்தும் போயின.[1] [2]

மேற்கோள்கள்[தொகு]