அஸ்தேயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அஸ்தேய இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அஸ்தேய (இந்தி - अस्तेय) "கள்ளாமை" என்ற பொருள் கொண்ட சமஸ்கிருத சொல்லாகும். இது சமணத்தில் ஒரு நல்லொழுக்கமாகும். செயல், பேச்சு, எண்ணங்கள் மூலமாக மற்றவர் பொருளை திருடாமலோ, அவ்வாறு திருடும் நோக்கம் இல்லாமலோ நடந்துகொள்வது கள்ளாமை (அஸ்தேய) ஆகும்.[1][2]

சமணத்தின் ஐந்து முக்கிய சூளுரைகளில் ஒன்றாக அஸ்தேய கருதப்படுகிறது.[3] இந்தியத் தத்துவத்தின் படி, பத்து வகையான தன்னடக்கங்களில் (சுயக் கட்டுப்பாடு) ஒன்றாக அஸ்தேய கருதப்படுகிறது.[4]

சொற்பிறப்பு[தொகு]

"அ" என்றால் "எதிர்மறை", "ஸ்தேய" என்றால் "களவு செய்தல்", என்றான இரு வார்த்தைகளை சேர்ந்து "அஸ்தேய (கள்ளாமை)" என்று சமஸ்கிருத மொழியிலிருந்து பெறப்பட்டது.

சமணம்[தொகு]

சமணத்தில் உள்ள ஐந்து சூளுரைகளில் ஒன்றாக கருத்தப்படும் இதை, ஸ்ராவகாஸ் (ஆண் சீடர்), ஸ்ராவிகாஸ் (பெண் சீடர்), துறவி ஆகியோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.[5] சமண இலக்கியமான, தத்துவார்த்சூத்ரத்தில், குறிப்பிட்டுள்ள இந்த சூளுரையின் 5 மீறல்கள் பின்வருமாறு: "திருடத் தூண்டுதல், திருட்டுப் பொருட்களைப் பெறுதல், தவறான எடைகள் / அளவுகள் பயன்படுத்துதல், செயற்கையான / போலியான பொருட்களைக் கொண்டு மற்றவர்களை ஏமாற்றுதல். [6]

இது ஸர்வார்த்தசித்தியில் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது:

திருடத் தூண்டுதல் அல்லது திருட்டை அனுமத்தில் முதல் மீறலாகும். ஒருவருக்கு தெரிந்தோ தெரியாமலோ அவரிடமிருந்து திருட்டுப் பொருட்களைப் பெறுதல் இரண்டாவது மீறலாகும். தர்மத்திற்கு புறம்பாகவோ, பொருளின் விலையை விட குறைவான விலையிலோ வாங்குதல் மூன்றாவது மீறலாகும். தவறான எடை அல்லது அளவைக் கொண்டு பிறரை ஏமாற்றி பொருளை தறுதலோ பெறுதலோ நான்காவது மீறலாகும். செயற்கையான / போலியான பொருட்களைக் கொண்டு மற்றவர்களை ஏமாற்றுதல் ஐந்தாவது மீறலாகும். இவையே அஸ்தேயத்தின் 5 மீறல்களாகும்.

- ஸர்வார்த்தசித்தி (7-27)[7]

இந்து மதம்[தொகு]

செயல், பேச்சு, எண்ணங்கள் மூலமாக மற்றவர் பொருளை திருடாமல் தவிர்த்தலே அஸ்தேய (கள்ளாமை) என்று இந்து மதத்தின் இலக்கியங்கள் வரையறுக்கின்றன".[3] இந்து மத நெறிமுறை கோட்பாடுகளில், இது பரவலாக விவாதிக்கப்பட்ட ஒன்றாகும்.[2] எடுத்துக்காட்டாக, பதஞ்சலி முனிவர், தன் யோகசூத்திரம் 2.30 யில் குறிப்பிடும் இயமங்களில் "அஸ்தேய" மூன்றாவதாக இடம்பெற்றுள்ளது.[8]

अहिंसासत्यास्तेय ब्रह्मचर्यापरिग्रहाः यमाः ॥३०॥

  1. கொல்லாமை (अहिंसा): அகிம்சை, பிறவுயிர்களைத் துன்புறுத்தாமை.[9]
  2. வாய்மை (सत्य): சத்யம், உண்மையைக் கடைப்பிடித்தல்[9][10]
  3. கள்ளாமை (अस्तेय): அஸ்தேய களவு செய்யாமை[9]
  4. காமம் கடத்தல் (ब्रह्मचर्य): பிரம்மச்சர்யம், துணைக்கு துரோகம் இழைக்காமை[10]
  5. அவாவறுத்தல் (अपरिग्रहः): பேராசையை அடக்குதல்[9] தனக்கு மட்டும் சொந்தம் கொண்டாடாமை[10]

ஆக, இந்து மதப்படி ஐந்து இயமங்களில் அஸ்தேய ஒன்றாகும். சரியான ஒழுக்கமான வாழ்வை வாழ ஐந்து முக்கிய நியமங்களும் இந்து மதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.[11]

தொடர்புடைய கருத்துகள்[தொகு]

எதிர்பார்ப்பு இல்லாமல் தகுதியான நபருக்கு செய்யும் ஈகை, "தானம்" என்று இந்து மதத்தில் பரிந்துரைக்கப்படும் நியமங்களில் ஓன்றாகும். பிறரிடமிருந்து திருடுதலை தவிர்ப்பதே தானம் செய்தலின் நோக்கமாகும். அஸ்தேய இயமத்தின் பரிகாரம் தானமாகும்.[12]

அப்பரிகிரஹவின் வித்தியாசம்[தொகு]

இந்து சமண மதங்களில் உள்ள பல நல்லொழுக்கங்களில் அஸ்தேய மற்றும் அப்பரிகிரஹ அடங்கும். அஸ்தேயமும், அப்பரிகிரஹவும் மனிதனுக்கும் பொருளுக்கும் இடையே நடப்பவையாக இருந்தாலும், இரண்டுமே இரு வேறு சிந்தாந்தங்களாகும். அஸ்தேய கள்ளாமையைக் குறிக்கின்றது.[13][14] மாறாக, அப்பரிகிரஹ எதன் மீதும் பற்றற்றத் தன்மையைக் குறிக்கின்றது.[15][16]

குறிப்புகள்[தொகு]

  1. பாட்ரிசியா கார்னர் (2009), பணியிட ஆன்மீகம் மற்றும் வணிக நெறிமுறைகள்: ஒரு கிழக்கு ஆன்மீக மரபில் இருந்து நுண்ணறிவு, வணிக நெறிமுறைகளின் பத்திரிகை, 85 (3), 377-389
  2. 2.0 2.1
    கே.என். திவாரி (1998), கிளாசிக் இந்திய நெறிமுறை சிந்தனை, மோதிலால் பனாரசிடஸ்,
  3. 3.0 3.1
    பத்தஞ்சலி ஜேம்ஸ் வூட் (மொழிபெயர்ப்பாளர்), ஹார்வர்ட் யுனிவர்சிட்டி பிரஸ், பக்கங்கள் 178-182 யோகா அமைப்பு
  4. KN Aiyar (1914), Thirty Minor Upanishads, Kessinger Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1164026419, Chapter 22, pages 173–176
  5. Glasenapp, Helmuth Von (1999), Jainism: An Indian Religion of Salvation, Delhi: Motilal Banarsidass, ISBN 81-208-1376-6
  6. S.A. Jain 1992, ப. 208.
  7. "Jain1992".
  8. Āgāśe, K. S. (1904). Pātañjalayogasūtrāṇi. Puṇe: Ānandāśrama. பக். 102. https://archive.org/stream/patanjaliyoga/yoga_sutras_three_commentaries#page/n111/mode/2up. 
  9. 9.0 9.1 9.2 9.3 James Lochtefeld, "Yama (2)", The Illustrated Encyclopedia of Hinduism, Vol. 2: N–Z, Rosen Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780823931798, page 777
  10. 10.0 10.1 10.2 Arti Dhand (2002), The dharma of ethics, the ethics of dharma: Quizzing the ideals of Hinduism, Journal of Religious Ethics, 30(3), pages 347-372
  11. Mathew Clarke (2014), Handbook of Research on Development and Religion, Elgar Reference, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0857933577, page 83
  12. Patañjali (Translator: SV Bharti), Yoga Sutras of Patanjali: With the Exposition of Vyasa, Vol. 2, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120818255, pages 684–686
  13. நிகாம், NA (1954), காந்தியின் தத்துவம் , தி ரெகவின் ஆஃப் மெட்டாபிசிக்ஸ், தொகுதி. 7, எண். 4, பக்கங்கள் 668-678
  14. Donna Farhi (2011), Yoga Mind, Body & Spirit: A Return to Wholeness, MacMillan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0805059700, pages 10–11
  15. David Frawley, Yoga and the Sacred Fire: Self-Realization and Planetary Transformation, Motilal Banarsidas, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120827462
  16. C Bell (2011), Mindful Yoga, Mindful Life: A Guide for Everyday Practice, Rodmell Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1930485204, page 74-89
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்தேயம்&oldid=3913641" இலிருந்து மீள்விக்கப்பட்டது