உள்ளடக்கத்துக்குச் செல்

அலெக்சாண்டர் லூயிசு பீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலெக்சாண்டர் லூயிசு பீல் (Alexander Louis Peal) மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவைச் சேர்ந்த கானகப் பணியாளர் மற்றும் பாதுகாவலர் ஆவார். தனது சொந்த நாட்டின் பல்லுயிர் மற்றும் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகளுக்காக இவருக்கு 2000 ஆம் ஆண்டில் மதிப்புமிக்க பன்னாட்டு கோல்ட்மேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது. [1] குள்ள நீர்யானை ஆராய்ச்சியாளர் பிலிப் ராபின்சனுடன் பணிபுரிந்த பீல், 1983 ஆம் ஆண்டில் சப்போ தேசிய பூங்காவாக நிறுவப்பட்ட பகுதியை ஆய்வு செய்து லைபீரியாவின் முதல் அதிகாரப்பூர்வ தேசிய பூங்காவை உருவாக்கினார் .

லைபீரியாவின் இயற்கையைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இலாப நோக்கற்ற சங்கத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பீல் உள்ளார், [2] பொதுவான சிம்பன்சி ( பான் டிரோக்ளோடைட்டுகள்) வகை விலங்குகளைப் பாதுகாப்பதில் பீலுக்குள்ள ஆர்வம் மற்றும் ஆராய்ச்சிக்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் உயர்பாலூட்டி அறிஞர்கள் குழுவின் உறுப்பினராக உள்ளார்.

1992 ஆம் ஆண்டில் பீல் நாடுகடத்தப்பட்டிருந்தபோதும்  லைபீரியாவில் பாதுகாப்பு முயற்சிகளை தொடர்ந்து உயிரோடு வைத்திருக்க லைபீரியாவில் இயற்கை பாதுகாப்பு புதுப்பித்தல் சங்கத்தை  பீல் நிறுவினார். 1997 ஆம் ஆண்டு  லைபீரியாவில் போர் நிறுத்தப்பட்ட சில வாரங்களுக்குள் சப்போ தேசிய பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள சமூகங்களின் நிலையை மதிப்பிடுவதற்காக சர்வதேச அமைதி காக்கும் படையினருடன் சேர்ந்து ஒரு சிறிய குழுவை இவர் வழி நடத்தினார். பீல் 1998 ஆம் ஆண்டு மன்ரோவியாவுக்குத் திரும்பி நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கினார். 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில்  லைபீரிய செனட் பல்லுயிர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தத்தை அங்கீகரித்து ஒப்புதல் அளித்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Conservation International Press Release (2000-04-17). "West Africa's Forest Champion Honored". Conservation International Press Release. Archived from the original on 2013-04-14. பார்க்கப்பட்ட நாள் 2008-01-02.
  2. Tawa, Renee (2000-04-17). "Honoring a Champion of West Africa’s Wildlife". Los Angeles Times. http://articles.latimes.com/2000/apr/17/news/cl-20407. பார்த்த நாள்: 2008-08-02.