அருணாச்சல் சாரணர்கள்
அருணாச்சல் ஸ்கவுட்ஸ் | |
---|---|
சேவையில் | 2010 முதல் |
நாடு | இந்தியா |
கடப்பாடு | இந்தியா |
பிரிவு | இந்தியத் தரைப்படை |
வகை | இந்தியத் தரைப்படை |
பங்கு | இமயமலைப் போர்கள் |
அளவு | 2 பட்டாலியன் |
அருணாச்சல் ஸ்கவுட்ஸ், இந்திய பாதுகாப்புப் படைகளில் ஒன்றான இந்தியத் தரைப்படையின் ஒரு பகுதியாகும். இதன் தலைமையிடம் வடகிழக்கு இந்தியாவில் அமைந்த அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிழக்கு சியாங் மாவட்டத்தின் தலைமையிடமான பாசிகாட் நகரத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரியாங் எனுமிடத்தில் அமைந்துள்ளது. 2010-இல் துவக்கப்பட்ட அருணாச்சல் ஸ்கவுட்ஸ் 2 பட்டாலியன்களைக் கொண்டது.[1] இது அசாம் இராணுவ ரெஜிமெண்டின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. இப்படை நிறுவியதின் முதன்மை நோக்கம் சீனாவிடமிருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையை பாதுகாப்பதே. இமயமலையின் உயரமான மலைப்பகுதிகளில் போரிடக்கூடிய அருணாச்சல் ஸ்கவுட்சின் வீரர்கள் பெரும்பாலும் திபெத்தியர்கள் மற்றும் நேபாள நாட்டு கூர்க்கா இளைஞர்களைக் கொண்டு நிறுவப்பட்டதாகும். தேர்வு செய்யப்பட்ட லடாக் ஸ்கவுட்ஸ் வீரர்கள் போன்று அருணாச்சல் ஸ்கவுட்ஸ் வீரர்களுக்கு 42 வார போர்ப் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "First Arunachal Scouts battalion arrives in state". The Times of India (in ஆங்கிலம்). May 2, 2012. பார்க்கப்பட்ட நாள் 2020-11-03.