அரசும் சமயமும் பிரிதல்
அரசும் சமயமும் பிரிதல் (Separation of church and state) என்பது ஒர் அரசியல் சட்ட கொள்கை ஆகும். இது அரசியல் நிறுவனங்களும் சமய நிறுவனங்களும் தனித்து தனித்து சுதந்திரமாக இயங்க வேண்டும் என்று வேண்டுகிறது[1]. இது பொதுவாக சமய சார்பற்ற அரசு, மக்களுக்கு தமக்கு விருப்பமான சமயத்தை பின்பற்றும் உரிமை என்ற இரு கொள்கைகளின் கலப்பாகும்.[2] குறிப்பாக அரசு சமயம் சார்பற்றதாக்கவும், இயன்றவரை சமய செயற்பாடுகளில் தலையிடாமலும் இருக்க வேண்டும் என இந்தக் கொள்கை வேண்டுகிறது. பல்வேறு சமய சார்புடைய சமூகங்களை ஒரே அரசியல் அலகில் இனைக்க இந்தக் கோட்பாடு அவசியமாகிறது. பொதுவாக, அரசும் சமயமும் முரண்படுகையில் அரசே முதன்மைபடுகிறது. குறிப்பாக மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு சமயத்தை விட கூடிய பொறுப்பும் கடமையும் மிகுந்ததாக கருத்தப்படுகிறது.
அரசு சமயப் பிரிவினை மேற்கு நாடுகளில், சிறப்பாக அமெரிக்காவிலேயே தோற்றம் கண்டது. அரசு சமய பிரிவினை இந்தியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. இலங்கை, ஈரான், பாகிஸ்தான் போன்றவை இந்தக் கொள்கையை கடைப்பிடிப்பதில்லை. இலங்கையில் புத்த மதமே அரசால் முதன்மைப்படுத்தப்பட்டது இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Civics Glossary". historycentral.com. Archived from the original on 2007-10-02. பார்க்கப்பட்ட நாள் 2007-12-29.
- ↑ Chan, Shun-hing and Beatrice Leung (2003). Changing Church and State Relations in Hong Kong, 1950–2000. Hong Kong University Press, pg 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9622096123. "These oft-quoted clauses of Jefferson's theory of a 'wall of separation' reflect two significant foundations of Church-State relations in the US. Firstly, the separation of Church and State stands as a constitutional principle that promotes democracy and protects the religious freedom of all Americans equally. Secondly, this principle emerges as a unique American contribution to political theory (Feldman 1997, 4)."