உள்ளடக்கத்துக்குச் செல்

அரசு மேல்நிலைப் பள்ளி, காக்கூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளி (Government Higher Secondary School, Kakkoor) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் வட்டம் காக்கூர் கிராமத்தில் அமைந்துள்ளது.[1] முதுகுளத்தூரிலிருந்து இராமநாதபுரம் செல்லும் சாலையில் 7 கி.மீ தொலைவில் காக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. தமிழ்நாடு மாநில அரசாங்கத்தின் பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் பள்ளி செயல்படுகிறது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இங்கு கல்வி கற்கின்றனர். மாணவர்கள் பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொள்கின்றனர்.[2]

காக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளி 5.25 ஏக்கரில் அமைந்துள்ளது. 3.00 ஏக்கரில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. ‘ப’ வடிவ அமைப்பில் கட்டிடம் அமைக்கப்பட்டு இதில் 15 வகுப்பறைகளும் 4 ஆய்வக அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ராமநாதபுரம் மாவட்டத்தில் 94 அரசு பள்ளிகள் உட்பட 178 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி". தினமலர். https://m.dinamalar.com/detail.php?id=2266387. பார்த்த நாள்: 24 December 2023. 
  2. mohan (2019-09-22), "இராமநாதபுரத்தில் அண்ணா பிறந்த நாள் விரைவு சைக்கிள் போட்டி. வெற்றி பெற்ற மாணவ, மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினார்", www.keelainews.com (in அமெரிக்க ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2023-12-24