அமோனியம் டையுரேனேட்டு
இனங்காட்டிகள் | |
---|---|
7783-22-4 | |
ChemSpider | 170692 |
பப்கெம் | 197096 |
UNII | 39Y3LFK95B |
பண்புகள் | |
(NH4)2U2O7 | |
வாய்ப்பாட்டு எடை | 624.13 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமோனியம் டையுரேனேட்டு (Ammonium diuranate) என்பது ((NH4)2U2O7) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் அப்பம் தயாரிக்கும் போது கிடைக்கும் கதிரியக்க இடைநிலை யுரேனிய வடிவங்களில் இதுவும் ஒன்றாகும். மஞ்சள் அப்பம் என்ற பெயர் அசலாக இந்த பிரகாசமான மஞ்சள் நிற வேதிப்பொருளுக்கே வழங்கப்பட்டது. தற்போது மஞ்சள் நிறத்திலில்லாத யுரேனியம் ஆக்சைடு கலவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. கலப்பு-ஆக்சைடு எரிபொருள் உருவாக்கத்தின் போதும் இது இடைநிலை வேதிப்பொருளாக உருவாகிறது.
மண்ணெண்ணையிலுள்ள மூவிணைய அமீன்களைப் பயன்படுத்தி யுரேனியம் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் நீர்த்த அமோனியம் ஐதராக்சைடு சேர்ப்பதன் மூலம் அமோனியம் இருயுரேனேட்டை வீழ்படிவாக்கலாம். யுரேனியம் ஆக்சைடாக உயர்வெப்பநிலைக்கு சூடேற்றுவதற்கு முன்பு அடர்த்தி மிகுத்து மையவிலக்கி மூலம் தனித்துப் பிரிக்கப்படுகிறது.
அமோனியம் இருயுரேனேட்டு ஒரு காலத்தில் மட்பாண்டங்களில் வண்ண மெருகூட்டல்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டது. [1] இருப்பினும் எரிக்கும்போது இது யுரேனியம் ஆக்சைடாக சிதைகிறது, எனவே இந்த யுரேனேட்டு முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட யுரேனியம் ஆக்சைடை விட குறைந்த விலை பொருளாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Safford, Hurd W.; Kuebel, A. (1943-02-01). "Preparations and properties of ammonium diuranate". Journal of Chemical Education 20 (2): 88. doi:10.1021/ed020p88. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9584. Bibcode: 1943JChEd..20...88S.