அமைப்பு முறையேடு
அமைப்பு முறையேடு என்பது ஒரு நிறுமத்தின் செயல்பாட்டு எல்லையை நிர்ணயிக்க கூடிய ஆவணத்தையே அமைப்பு முறையேடு என்பர்.
பொருளடக்கம்
[தொகு]- பெயர் குறித்த உட்பிரிவு
- இடம் குறித்த உட்பிரிவு
- நோக்கம் குறித்த உட்பிரிவு
- பொறுப்பு குறித்த உட்பிரிவு
- முதல் குறித்த உட்பிரிவு
- அமைப்பு அல்லது உடன்பட ஒப்பும் உட்பிரிவு
பெயர் குறித்த உட்பிரிவு
[தொகு]நிறுமத்தின் பெயர் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும். நிறுமத்தின் பெயர் வேறுறொரு நிறுமத்தின் பெயருடன் ஒத்திருக்க கூடாது பொது நிறுமத்தில்"வறையறுக்கப்பட்டது"" என்று முடிய வேண்டும். தனி நிறுமத்தில் """"தனி வரையறு"" என்று முடிய வேண்டும்.
இடம் குறித்த உட்பிரிவு
[தொகு]பதிவு அலுவலகம் அமைந்துள்ள மாநிலத்தின் பெயர் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் அப்படியிருந்தால் உண்மை முகவரி தர வேண்டியது இல்லை.
நோக்கம் குறித்த உட்பிரிவு
[தொகு]நிறுமத்தின் நடவடிக்கைகள் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு குறிபிட்ட நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ள இயலும், அதிகார எல்லை மீறிய செயல்களுக்கு எவ்வித சட்ட பலன் எதுமில்லை.
பொறுப்பு குறித்த உட்பிரிவு
[தொகு]நிறுமத்தில் உறுப்பினரின் பொறுப்பு வரையறுக்கப்பட்டது. பொறுப்புறுதி நிறுமாயின் உறுப்பினரின் பொறுப்பு வரையறுக்கப்பட்டிருக்கும். நிறும சொத்துகளை கடன்களை அடைக்க போதுமானதாக இல்லாத நிலையில் ஒவ்வொரு உறுப்பினரும் தருவதாக உறுதியளித்த தொகை குறிப்பிடப்பட்டிருக்கும்.
முதல் குறித்த உட்பிரிவு
[தொகு]எப்பங்கு முதலுடன் நிறுமம் தொடங்குகிறது என்ற விவரம். முதல் தொகை குறிப்பிட்ட பங்குகளாக பிரிக்கப்பட்ட விவரம்.
அமைப்பு (அ) உடன்பட ஒப்பும் உட்பிரிவு
[தொகு]தனி நிறுமம் குறைந்தது - 2 நபர்கள் பொது நிறுமம் - 7 நபர்கள் அமைப்பு முறையேட்டில் தங்களுக்கு எதிராக உள்ள பங்குகளின் உடன்பட்டு கையொப்பம் இடுகின்றன.