அமெரிக்கத் தொழிலாளர் நாள்
Appearance
- இந்தக் கட்டுரை ஐக்கிய அமெரிக்காவின் விடுமுறை நாளைக் குறித்தது. உலகின் பிற பகுதிகளில் கடைபிடிக்கப்படும் தொழிலாளர் நாட்களைக் குறித்துக் காண தொழிலாளர் நாள்.
தொழிலாளர் நாள் | |
---|---|
தொழிலாளர் நாள் பேரணி, யூனியன் சதுக்கம், நியூயார்க், 1882 | |
கடைப்பிடிப்போர் | ஐக்கிய அமெரிக்கா |
வகை | கூட்டரசு விடுமுறை (கூட்டாட்சி அரசு, டிசி மற்றும் ஐ.அ. ஆட்சிப்பகுதிகள்); மற்றும் மாநில விடுமுறை (அனைத்து 50 ஐ.அ. மாநிலங்களிலும்) |
கொண்டாட்டங்கள் | பேரணிகள், வெளிப்புற சமையல் கொண்டாட்டங்கள் |
நாள் | செப்டம்பர் திங்கள் முதல் திங்கட்கிழமை |
தொடர்புடையன | தொழிலாளர் நாள் |
தொழிலாளர் நாள் (Labor Day) ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு விடுமுறை நாளாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை அன்று கொண்டாடப் படுகிறது. 2012ஆம் ஆண்டில் செப்டம்பர் 3 அன்று இது கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பொருளியல், சமூகத் துறைகளில் உழைப்பாளிகளின் பங்களிப்பு நினைவுகூரப்படுகிறது. மேலும் இது பல அமெரிக்கர்களால் வேனில் காலத்தின் கடைசி நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் பல பேரணிகளும் விருந்துக் கூட்டங்களும் தடகளப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன[1]. அமெரிக்கத் தேசிய காற்பந்து லீகின் (NFL) போட்டிகள் இந்த நாளில் துவங்கும். பல மாநிலங்களில் பள்ளிகள் தொழிலாளர் நாளிற்கு அடுத்த நாள் துவங்குகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Labor Day or Labour Day Celebrations in USA - United States of America". Archived from the original on 2012-08-31. பார்க்கப்பட்ட நாள் 2012-08-28.
- Green, James (2007). Death In the Haymarket: A Story of Chicago, the First Labor Movement and the Bombing that Divided Gilded Age America. Anchor. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4000-3322-5.
வெளி இணைப்புகள்
[தொகு]- In Praise of the American Worker பரணிடப்பட்டது 2010-09-07 at the வந்தவழி இயந்திரம் - slideshow by Life magazine
- Laborday History and Activities