அபீசி அபுரு
அபீசி அபுரு[1] (பாரசீகம்: حافظ ابرو, இறப்பு சூன் 1430) என்பவர் நடு ஆசியாவின் தைமூரிய ஆட்சியாளர்களின் அவையில் பணி செய்த ஒரு பாரசீக வரலாற்றாளர்[2] ஆவார். இவரது முழுப்பெயர் அப்தல்லா (அல்லது நூருல்லா) இபின் லோத்திப்-அல்லா இபின் 'அப்தல் ரஷீத் பெதாதினி ஆகும்.[1]
இவர் குராசான் பகுதியில் பிறந்தார். அமாதானில் கல்வி பயின்றார். 1380களில் தைமூரின் அவையில் இணைந்தார். தைமூரின் இறப்பிற்குப் பிறகு எராத்தில் தைமூரின் மகனான சாருக்கிடம் பணியாற்றினார். தைமூர் மற்றும் சாருக்கின் அவைகளில் இருந்த மற்ற அறிஞர்களுடன் இவர் உரையாற்றியுள்ளார். இவர் ஒரு சிறந்த சதுரங்க ஆட்டக்காரராக அடையாளப்படுத்தப்படுகிறார்.[1]
தைமூரிய நாடு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் வரலாறு மற்றும் புவியியலைப் பற்றி ஏராளமான நூல்களை எழுதியும் ஒன்றுபடுத்தியும் உள்ளார். இவரை இந்தப் பணிகளுக்கு சாருக்கு நியமித்தார்.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Maria Eva Subtelny and Charles Melville, "Ḥāfeẓ-e Abru" at Encyclopædia Iranica
- ↑ Lewis, ed. by B. (1986). Encyclopedia of Islam, Vol 3 (Photomechan. repr. ed.). Leiden [u.a.]: Brill [u.a.] p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004081186.
{{cite book}}
:|first1=
has generic name (help)
ஆதாரங்கள்
[தொகு]- "Ḥāfeẓ-e Abru". Encyclopaedia Iranica, Vol. XI, Fasc. 5. (2002). 507–509.