அனன்யா
Appearance
அனன்யா | |
---|---|
பிறப்பு | ஆயில்யா கோபாலகிருஷ்ணன் நாயர் 29 மார்ச்[1] கேரளா, இந்தியா |
பணி | நடிகை _ |
செயற்பாட்டுக் காலம் | 2008–இன்றுவரை |
அனன்யா என்ற தமது திரைப்பெயரால் பரவலாக அறியப்படும் ஆயில்யா நாயர் (Ayilya Nair, பிறப்பு 29 மார்ச்சு), மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் இந்திய நடிகை. இவரது அறிமுகம் 2008ஆம் ஆண்டில் பாசிடிவ் என்ற மலையாளத் திரைப்படத்தில் அமைந்தது. தமிழில் அடுத்த ஆண்டு நாடோடிகள் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு பரவலான பாராட்டைப் பெற்றுத் தந்தது. மேலும் இப்படத்திற்காக இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் தொலைக்காட்சி விருதினைப் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ananya celebrates birthday". poochandi.com. பார்க்கப்பட்ட நாள் 2010-03-29.