உள்ளடக்கத்துக்குச் செல்

அகத்மாத்தோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகத்மாத்தோர்
Agadmator
அந்தோனியோ இராதிச்
தனிப்பட்ட தகவல்
பிறப்புஅந்தோனியோ இராதிச்
Antonio Radić
16 சூன் 1987 (1987-06-16) (அகவை 37)
தொழில்யூடியூப் பதிவாளர்
யூடியூப் தகவல்
ஒளிவழித்தடம்
செயலில் இருந்த ஆண்டுகள்2016–இன்று வரை
சந்தாதாரர்கள்1.16 மில்.
மொத்தப் பார்வைகள்502 மில்.

10 செப்டம்பர் 2021 அன்று தகவமைக்கப்பட்டது
அந்தோனியோ இராதிச்
Antonio Radić
நாடுகுரோவாசியா
உச்சத் தரவுகோள்2010 (செப்டம்பர் 2010)

அகத்மாத்தோர் (agadmator) என அழைக்கப்படும் அந்தோனியோ ராதிச் (Antonio Radić; பிறப்பு: 16 சூன் 1987), ஒரு குரோவாசிய யூடியூப் பதிவரும், சதுரங்க ஆட்டக்காரரும் ஆவார். இவரின் யூடியூப் ஓடையின் பெயர் அகத்மாத்தோரின் சதுரங்க ஓடை (agadmator's chess channel) ஆகும். 2021 பிப்ரவரி 7 அன்று இவரது ஓடை 1,000,000 சந்தாதாரர்களைக் கடந்தது. ராதிச்சின் ஓடையில் உள்ள காணொளிகள் மொத்தம் 500 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன.[1][2][3][4] அவரது ஓடையில், இராதிச் சமீபத்திய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சதுரங்க விளையாட்டுகளை மதிப்பாய்வு செய்கிறார்.

அமெரிக்க சதுரங்க எழுத்தாளர் கர்னல் டேவிட் ஏ. ஹேட்டர் அவரை "யூடியூப்பின் முன்னணி சதுரங்க ஓடையாளர்களில் ஒருவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.[5]

பின்னணி

[தொகு]

இராதிச்சின் வசிப்பிடம் குரோவாசியாவில் கிரித்சேவிச் ஆகும்.[6] பீடே மாஸ்டரான அவரது தாத்தா அண்டோ கிரண்ஜிச், இவருக்கு நான்கு வயதில் சதுரங்கத்தை அறிமுகப்படுத்தினார். இருப்பினும், அவர் பின்னர் விளையாடுவதை நிறுத்தி, 17 வயது வரை சதுரங்கத்திற்கு திரும்பவில்லை.[3] இராதிச்சின் உச்ச பிடே ஈலோ மதிப்பீடு 2010 ஜூலை 2010 இல் அடையப்பட்டது (அக்டொபர் 2021இல் அவரின் மதிப்பீடு 1949).[7] இவர் அதிக சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றாலும், செஸ்.காம், லிசெஸ் போன்ற பல்வேறு இணைய சதுரங்க தளங்களில் விளையாடுகிறார்.[3][8]

யூடியூப் ஓடை

[தொகு]

ரெடிக் முதலில் தனது யூடியூப் சேனலைத் 2007-இல் தொடங்கினார். அப்போது அவர் தனது தந்தையுடன் இணைந்து திருமணக் காணொளிப் பதிவராகப் பணியாற்றினார். அவர் தனது வியாபாரத்தை விளம்பரப்படுத்த திருமணக் காணொளிகளை தனது ஓடையில் வெளியிட்டார். அவர் பின்னர் 2016-இல் சதுரங்கக் காணொளிகளை வெளியிடத் தொடங்கினார். அவரது யூடியூப் ஓடை 2017-இல் சுமார் 20,000 சந்தாதாரர்களை அடைந்து அவரது வழக்கமான வருமானத்தை விட அதிக வருமானத்தை ஈட்டித் தந்தது.[2] முழு நேரமும் ஓடையில் கவனம் செலுத்த ரெடிக் தனது திருமண வீடியோகிராபர் தொழிலை கைவிட்டார்.[3][9] கிட்டத்தட்ட ரெடிக்கின் அனைத்துக் காணொளிகளும் ஒரே வடிவத்தைப் பின்பற்றுகின்றன: ஒரு சதுரங்க விளையாட்டின் விமர்சனம்.[1] அவர் வழக்கமாக தினசரி அடிப்படையில் புதிய காணொளிகளை வெளியிடுவார், 24 மணி நேரத்திற்குள் பெரிய போட்டிகளின் விளையாட்டுகளை மதிப்பாய்வு செய்வார்.[3] உலக சதுரங்க வாகையாளர் 1921 போட்டியின் விளையாட்டுகள் போன்ற பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சதுரங்கப் போட்டிகள் பற்றிய அவரது மதிப்பாய்வுகள் தொடராக அமைக்கப்பட்டுள்ளன.[10] அவரது மிகவும் பிரபலமான காணொளி "சதுரங்க வரலாற்றில் சிறந்த இராணி தியாகம்" என்ற தலைப்பில் உள்ளது. அந்தக் காணொளி 2021 செப்டம்பர் நிலவரப்படி 6.3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்தக் காணொளியில், அவர் 1962-இல் நடந்த ரசீத் நெசுமெத்தீனொவ், ஒலெக் செர்னிக்கோவ் இடையேயான ஒரு விளையாட்டை பகுப்பாய்வு செய்கிறார்.[11]

2021 பிப்ரவரி 7 இல், இவரது ஓடை 1 மில்லியன் சந்தாதாரர்களை எட்டியது. இந்த சாதனையை செய்த முதல் சதுரங்க ஓடையாளர் இவர் ஆவார். இவருக்குப் பின்னர் இகாரு நகமுரா, லெவி ரோஸ்மன் ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Agadmator's Chess Channel". YouTube. பார்க்கப்பட்ட நாள் 14 April 2021.
  2. 2.0 2.1 Ninan, Susan (4 August 2020). "Agadmator: From smalltown Croatia, an unlikely chess phenomenon". ESPN. ESPN. பார்க்கப்பட்ட நாள் 4 September 2020.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Shah, Sagar (31 October 2018). "Agadmator - the man who has 290,000+ followers on YouTube". ChessBase India. பார்க்கப்பட்ட நாள் 1 September 2019.
  4. 4.0 4.1 Shah, Sagar (8 February 2021). "First Chess Channel to Hit 1 million Subs". ChessBase India YouTube channel. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
  5. Hater, Colonel David A. (19 March 2019). "Tani Wins at NYS Scholastic Championships". United States Chess Federation. பார்க்கப்பட்ட நாள் 6 March 2020.
  6. Belani, Hrvoje (21 February 2018). "Antonio Radić: 'Svojim YouTube kanalom mogu svakoga zainteresirati za šah'" (in Croatian). பார்க்கப்பட்ட நாள் 17 November 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. "Radic, Antonio". FIDE. பார்க்கப்பட்ட நாள் August 12, 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  8. "Agadmator". Lichess. பார்க்கப்பட்ட நாள் 1 September 2019.
  9. Johnson, Ben (14 January 2020). "The Perpetual Chess Podcast Ep.160". The Perpetual Chess Podcast. பார்க்கப்பட்ட நாள் 1 May 2020.
  10. "Capablanca vs. Lasker - World Championship Match 1921". YouTube. பார்க்கப்பட்ட நாள் 1 September 2019.
  11. "The Greatest Queen Sacrifice in Chess History - Nezhmetdinov vs Chernikov (1962)". YouTube. பார்க்கப்பட்ட நாள் 15 September 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகத்மாத்தோர்&oldid=3859862" இலிருந்து மீள்விக்கப்பட்டது