4-மெத்தில்பென்சில்மும்மெத்திலமோனியம் ஐதராக்சைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பாரா-மெத்தில்பென்சில்மும்மெத்திலமோனியம் ஐதராக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
43011-61-6 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12324565 |
| |
பண்புகள் | |
C11H19NO | |
வாய்ப்பாட்டு எடை | 181.28 g·mol−1 |
கொதிநிலை | dec. |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
4-மெத்தில்பென்சில்மும்மெத்திலமோனியம் ஐதராக்சைடு (4-Methylbenzyltrimethylammonium hydroxide) என்பது C11H18NOH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நான்கிணைய அம்மோனியம் சேர்மமாக இது வகைப் படுத்தப்படுகிறது. 4-மெத்தில்பென்சில் புரோமைடை மூயெத்திலமீனுடன் சேர்த்து வினைபுரியச் செய்து தொடர்ந்து தண்ணீரில் கரைக்கப்பட்ட வெள்ளி ஆக்சைடை சேர்த்து கிளறினால் 4-மெத்தில்பென்சில்மும்மெத்திலமோனியம் ஐதராக்சைடு உருவாகும்.[1]
வினைகள்
[தொகு]தொலுயீன் சேர்மத்திலுள்ள பீனோதயசீனுடன் 4-மெத்தில்பென்சில்மும்மெத்திலமோனியம் ஐதராக்சைடை சேர்த்து சூடுபடுத்தினால் இது ஆப்மான் நீக்கல் வினைக்கு உட்பட்டு (2.2)பாராசைக்ளோபேன் சேர்மமாக உருவாகிறது.[1]
மற்ற நான்கிணைய அம்மோனியம் ஐதராக்சைடுகளுடன் (எ.கா. (5-மெத்தில்-2-தையீனைல்மெத்தில்) மும்மெத்திலமோனியம் ஐதராக்சைடுடன் இதைச் சேர்த்து சூடுபடுத்தினால் [2.2]பாராசைக்ளோ(2,5)தயோபீனோபேன் சேர்மத்தைப் பெறலாம்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 H. E. Winberg, F. S. Fawcett (1962). "[2.2]Paracyclophane". Organic Syntheses 42: 83. doi:10.15227/orgsyn.042.0083.
- ↑ Otsubo, T., Mizogami, S., Osaka, N., Sakata, Y., & Misumi, S. (1977). Layered Compounds. XLII. Syntheses and Properties of Layered Paracycloheterophanes. Bulletin of the Chemical Society of Japan, 50(7), 1841–1849. எஆசு:10.1246/bcsj.50.1841