4-குளோரோபீனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
4-குளோரோபீனால்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-குளோரோபீனால்
வேறு பெயர்கள்
பா-குளோரோபீனால்
இனங்காட்டிகள்
106-48-9
3DMet B00391
Beilstein Reference
507004
ChEBI CHEBI:28078
ChEMBL ChEMBL57053
EC number 203-402-6
Gmelin Reference
2902
InChI
  • InChI=1S/C6H5ClO/c7-5-1-3-6(8)4-2-5/h1-4,8H
    Key: WXNZTHHGJRFXKQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C02124
பப்கெம் 4684
வே.ந.வி.ப எண் SK2800000
SMILES
  • C1=CC(=CC=C1O)Cl
UNII 3DLC36A01X
UN number 2020
பண்புகள்
C6H5ClO
வாய்ப்பாட்டு எடை 128.56 g·mol−1
தோற்றம் வெண்மையான திண்மம்
அடர்த்தி 1.2651 கி/செ.மீ3 40 °செல்சியசில்[1]
உருகுநிலை 43.1 °C (109.6 °F; 316.2 K)[1]
கொதிநிலை 219 °C (426 °F; 492 K)[1]
27.1 g/L
காடித்தன்மை எண் (pKa) 9.41[2]
-77.7·10−6 cm3/mol[3]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.5579[1]
கட்டமைப்பு
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 2.11 D
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-197.7 கிலோயூல்·மோல்−1 (s)
−181.3 கிலோயூல்·மோல்−1 (l)
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H290, H301, H302, H312, H314, H332, H411
P234, P260, P261, P264, P270, P271, P273, P280, P301+310, P301+312, P301+330+331, P302+352, P303+361+353, P304+312
தீப்பற்றும் வெப்பநிலை 121 °C (250 °F; 394 K)[4]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

4-குளோரோபீனால் (4-Chlorophenol) என்பது C6H4ClOH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அறியப்பட்ட மூன்று மோனோகுளோரோபீனால் மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும். நிறமற்றதாகவும் அல்லது வெள்ளை நிறத் திண்மம் ஆகவும் காணப்படுகிறது. 4-குளோரோபீனால் எளிதில் உருகும் மற்றும் தண்ணீரில் குறிப்பிடத்தக்க கரைதிறனை வெளிப்படுத்தும். இதன் காடித்தன்மை எண் மதிப்பு 9.14 ஆகும்.

தயாரிப்பு[தொகு]

பீனாலை குளோரினேற்றம் செய்து 4-குளோரோபீனால் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக முனைவுக் கரைப்பான்கள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவையே 4-குளோரோ வழிப்பெறுதிகளை அளிக்கின்றன். உருகிய பீனாலின் நேரடி குளோரினேற்றம் 2-குளோரோபீனால் உருவாவதற்கு உதவுகிறது.[5]

ஒரு காலத்தில் ஐதரோகுயினோன் தயாரிப்பதற்கான முன்னோடியாக 4-குளோரோபீனால் இருந்த காரணத்தால் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டது.[5] இது ஒரு பாரம்பரியமான முன்னோடிச் சேர்மமாகும். தாலிக் நீரிலியுடன் வினைபுரிந்து 1,4-ஈரைதராக்சி ஆந்த்ராகுயினோனைக் கொடுக்கிறது.[6] வணிகச் சாயமான குயினிசரின் தாலிக் நீரிலியும் 4-குளோரோபீனாலும் சேர்ந்து வினைபுரிந்து, இவ்வினையைத் தொடர்ந்து குளோரைடின் நீராற்பகுப்பு வினையும் நிகழ்வதால் உற்பத்தி செய்யப்படுகிறது.[7]

இரத்தத்தில் உள்ள உயர் கொழுப்பு மற்றும் மூவசைல்கிளிசரைடு அளவைக் கட்டுப்படுத்தும் மருந்தான குளோஃபைப்ரேட்டு 4-குளோரோபீனாலில் இருந்து பெறப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Haynes, p. 3.116
  2. Haynes, p. 5.90
  3. Haynes, p. 3.577
  4. Haynes, p. 16.20
  5. 5.0 5.1 Muller, François; Caillard, Liliane (2005), "Chlorophenols", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a07_001.pub2
  6. Bigelow, L. A.; Reynolds, H. H. (1926). "Quinizarin". Org. Synth. 6: 78. doi:10.15227/orgsyn.006.0078. 
  7. Bien, H.-S.; Stawitz, J.; Wunderlich, K. (2005), "Anthraquinone Dyes and Intermediates", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a02_355
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-குளோரோபீனால்&oldid=3793239" இலிருந்து மீள்விக்கப்பட்டது