3-அமினோபென்சமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
3-அமினோபென்சமைடு
3-Aminobenzamide
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-அமினோபென்சமைடு
இனங்காட்டிகள்
3544-24-9
ChEBI CHEBI:64042
ChemSpider 1583
EC number 222-586-9
InChI
  • InChI=1S/C7H8N2O/c8-6-3-1-2-5(4-6)7(9)10/h1-4H,8H2,(H2,9,10)
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 1645
SMILES
  • C1=CC(=CC(=C1)N)C(=O)N
பண்புகள்
C7H8N2O
வாய்ப்பாட்டு எடை 136.15 g·mol−1
தோற்றம் அரை-வெண்மை தூள்
அடர்த்தி 1.233கி/செ.மீ3
உருகுநிலை 115 முதல் 116 °C (239 முதல் 241 °F; 388 முதல் 389 K)
கொதிநிலை 329 °C (624 °F; 602 K)
மட. P 0.33
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Sigma-Aldrich
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H302, H315, H319, H335
P351, P338
Lethal dose or concentration (LD, LC):
1000 மி.கி/கி.கி (வாய்வழி பறவை)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

3-அமினோபென்சமைடு (3-Aminobenzamide) என்பது C7H8N2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரை வெண்மை நிறத்தில் தூளாகக் காணப்படும் இச்சேர்ம்ம் ஒரு பென்சமைடு ஆகும்.

தயாரிப்பு[தொகு]

3-நைட்ரோபென்சமைடை வினையூக்க ஐதரசனேற்றத்தின் வழியாக ஒடுக்கம் செய்து 3-அமினோபென்சமைடைத் தயாரிக்கலாம்[1].

பயன்கள்[தொகு]

டி.என்.ஏ பழுதாக்கல், படியெடுத்தல் கட்டுப்பாடு, திட்டமிட்ட செல் இறப்பு ஆகிய செயல்முறைகளுக்கு காரண நொதியான பாலி ஏ.டி.பி. ரைபோசு பாலிமெரேசை 3-அமினோபென்சமைடு தடுக்கிறது. பாலி ஏ.டி.பி. ரைபோசு பாலிமெரேசு செயலூக்கப்பட்டவுடன் அது உடனடியாக செல்லிலுள்ள நிக்கோட்டினமைடு அடினைன் டைநியூக்ளியோடைடைடி.என்.ஏ வை பழுதுபார்க்கப் பயன்படுத்திக் கொள்கிறது. குறைந்த அளவு நிக்கோட்டினமைடு அடினைன் டைநியூக்ளியோடைடு+ செல்லிலுள்ள அடினோசைன் டிரை பாசுப்பேட்டின் அளவைக் குறைக்கிறது. இதனால் செல்லிறப்பு நிகழ்கிறது [2]. 3-அமினோபென்சமைடின் கட்டமைப்பு நிக்கோட்டினமைடு அடினைன் டைநியூக்ளியோடைடு+ இன் கட்டமைப்பை ஒத்திருக்கிறது. எனவே இது பாலி ஏ.டி.பி. ரைபோசு பாலிமெரேசுடன் பிணைந்து நிக்கோட்டினமைடு அடினைன் டைநியூக்ளியோடைடு+ பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்கிறது. பாலி ஏ.டி.பி. ரைபோசு பாலிமெரேசு பெரும்பாலும் புற்றுநோய் சிகிச்சைக்கு இலக்காக்க் கருதப்படுவதால் 3-அமினோபென்சமைடும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Purnell, M. R; Whish, W. J. D. (1980). "Novel inhibitors of poly(ADP-ribose) synthetase". Biochem. J. 185 (3): 775–777. doi:10.1042/bj1850775. பப்மெட்:6248035. 
  2. 3-Aminobenzamide Product Information பரணிடப்பட்டது 2016-02-03 at the வந்தவழி இயந்திரம், Sigma-Aldrich, Accessed October 19, 2012
  3. Karlberg, T.; Hammarström, M.; Schütz, P.; Scensson, L.; Schüler, H. (2010). "Crystal Structure of the catalytic domain of human PARP2 in complex with PARP inhibitor ABT-888". Biochemistry 49 (6): 1056–1058. doi:10.1021/bi902079y. பப்மெட்:20092359. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=3-அமினோபென்சமைடு&oldid=3372897" இலிருந்து மீள்விக்கப்பட்டது