2016 பிப்ரவரி தமிழ்நாடு விண்கல் சம்பவம்
2016 பிப்ரவரி தமிழ்நாடு விண்கல் சம்பவம் (2016 February Tamil Nadu meteorite incident) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டத்திலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் வளாகத்தில் நிகழ்ந்தது. குறிப்பிட்ட அந்த தனியார் பொறியியல் கல்லூரியின் வளாகத்தில், மர்மப் பொருள் ஒன்று வானிலிருந்து விழுந்தது என்றும், அது அதிகமான சத்தத்துடன் வெடித்து சிதறியதாகவும், அதன் காரணமாக அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அக்கல்லூரியின் பேருந்து ஓட்டுநரான காமராசு என்பவர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.[1] [2][3]அசாதாரணமான வகையில் ஏற்பட்ட இந்த விபத்தினால் காயமடைந்தவர்களுக்கு அப்போதைய தமிழக முதல்வர் செயலலிதா நிவாரணமும் அறிவித்தார்.
கீழே விழுந்த அப்பொருள் 4 அடி (1.2 மீ) ஆழத்தில் ஒரு பள்ளத்தை விட்டுவிட்டு பாரதிதாசன் பொறியியல் கல்லூரியின் வளாகத்தில் உள்ள சன்னல்களை உடைத்து, காயங்களை ஏற்படுத்தியது. அந்தப் பகுதியில் இருந்த மற்றவர்கள் வழக்கத்திற்கு மாறான ஒலியைக் கேட்டதாகவும், புகைப் பட்டையைப் பார்த்ததாகவும், ஓட்டுநரின் உடலில் பாறைத் துண்டுகள் பதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.[4]
ஒரு சிறிய (11 கிராம் (0.39 அவுன்சு)[5] எடையுள்ள நீல நிறப் பொருள் ஒன்று இச்சம்பவத்தின்போது மீட்கப்பட்டது. சில நிபுணர்கள் அது ஏதோவொரு விண்வெளி வாகனத்தின் துண்டாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தனர்.[4] கைவிடப்பட்ட செலட்டின் குச்சிகள் வெடித்ததாக அதிகாரிகள் சந்தேகித்தனர். ஆனால் வெடிபொருட்களின் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்திய வானியற்பியல் கழகத்தைச் சேர்ந்த திபாங்கர் பானர்சி இந்த பொருள் ஒரு விண்கல்லாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தார்.[6][7] மற்ற வல்லுனர்கள், ஒரு சிறிய விண்கல் பெரிய பள்ளத்தை உருவாக்கியிருக்க முடியாது என்றனர்.[5] வேலூர் கல்லூரியில் விழுந்தது விண்கல் அல்ல என்று நாசா தெரிவித்துள்ளது.[8]
திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரியின் அதிகாரிகள், இப்பொருள் கார்பனுடன் தொடர்புடைய ஒரு வேதி எரிகல் என்று வலியுறுத்தினர்.[3]
ஒருவேளை இப்பொருள் ஒரு விண்கல்லாக இருந்தால், பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் விண்கல் காரணமாக ஒரு மனிதனின் முதல் உறுதிப்படுத்தப்பட்ட மரணம் இதுவாக இருக்கும்.[2][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "விண்கல் தாக்கி வேலூரில் ஒருவர் பலி". BBC News தமிழ். 2016-02-07. பார்க்கப்பட்ட நாள் 2022-12-03.
- ↑ 2.0 2.1 Auger, Monika (8 February 2016). "Authorities: Meteorite Killed Man in India". Wall Street Journal. https://www.cnn.com/2016/02/10/asia/india-meteorite-man-killed/index.html.
- ↑ 3.0 3.1 "It was meteorite that killed a person in Vellore: Study". ZeeNews. 9 February 2016. https://zeenews.india.com/news/tamil-nadu/it-was-meteorite-that-killed-a-person-in-vellore-study_1855995.html.
- ↑ 4.0 4.1 "Scientists study India's deadly 'meteorite' (Update)". phys.org. பார்க்கப்பட்ட நாள் 29 April 2021.
- ↑ 5.0 5.1 5.2 "Astrophysicists analyse 'meteorite' that killed bus driver, shattered windows in India". ABC News. 9 February 2016. https://www.abc.net.au/news/2016-02-10/scientists-study-deadly-meteorite-india/7154232.
- ↑ Chandrashekar, Nandini (7 February 2016). "Vellore Rock Unlikely to Be A Meteorite, Says Astro Prof". The New Indian Express. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2016/feb/07/Vellore-Rock-Unlikely-to-Be-A-Meteorite-Says-Astro-Prof-889568.html.
- ↑ Hauser, Christine (9 February 2016). "That Wasn’t a Meteorite That Killed a Man in India, NASA Says". New York Times. https://www.nytimes.com/2016/02/10/world/asia/that-wasnt-a-meteorite-that-killed-a-man-in-india-nasa-says.html.
- ↑ "வேலூர் கல்லூரியில் விழுந்தது விண்கல் அல்ல". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2016/feb/10/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-1274535.html. பார்த்த நாள்: 3 December 2022.