2010 விசுவமடு கும்பல்-வல்லுறவு வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2010 விசுவமடு கும்பல்-வல்லுறவு வழக்கு என்பது இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்து விசுவமடு பகுதியில் இரண்டு தமிழ்ப் பெண்கள் மீது நடத்தப்பட்ட கும்பல்-வல்லுறவு குறித்தான வழக்காகும்.[1][2][3]

தீர்ப்பு விவரம்[தொகு]

ராணுவ வீரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு, 30 ஆண்டுகால கடுஞ்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது[1].

தண்டனை விவரம்[தொகு]

  • இரண்டு குழந்தைகளின் தாயாகிய பெண்ணை கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக நால்வரும் தலா 20 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஐந்து பிள்ளைகளின் தாயாகிய பெண்ணை பாலியல் முறைகேடுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
  • வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக 5 லட்ச உரூபாவும், பாலியல் முறைகேட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ஒரு லட்ச ரூபாவும் வழங்க வேண்டும். இழப்பீடுகளை செலுத்தத் தவறும் பட்சத்தில் குற்றவாளிகள் ஒவ்வொருவரும் 3 வருட கடூழியச் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
  • கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு 25 ஆயிரம் உரூபா தண்டப்பணமும், பாலியல் முறைகேட்டிற்கு 10 ஆயிரம் உரூபா தண்டப்பணமும் செலுத்த வேண்டும். இதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் குற்றவாளிகள் ஒவ்வொருவரும் 2 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
  • தீர்ப்பின்படி, குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் அதிகபட்சமாக 30 ஆண்டுகள் குற்றவாளிகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்[4].

தீர்ப்பு குறித்தான ஊடகங்களின் பார்வை[தொகு]

வழக்கத்திற்கு மாறான ஒரு நடவடிக்கை (In an unusual move) என தீர்ப்பு குறித்து பிபிசி தெரிவித்தது. பாலியற் குற்றங்களுக்காக பாதுகாப்பு வீரர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது இலங்கையில் மிகவும் அரிதானது (extremely rare) எனவும் பிபிசி தெரிவித்தது[5].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "கூட்டு பாலியல் வல்லுறவு: 4 ராணுவத்தினருக்கு 30 ஆண்டு சிறை". பிபிசி தமிழோசை. 7 அக்டோபர் 2015. 10 அக்டோபர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "இராணுவ சிப்பாய்களுக்கு 30 ஆண்டு சிறை". தினகரன். 8 அக்டோபர் 2015. 2015-10-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 அக்டோபர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "இராணுவத்தின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அதியுச்ச தண்டனை : இளஞ்செழியன்". உதயன். 7 அக்டோபர் 2015. 10 அக்டோபர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "விசுவமடு கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கு: 4 இராணுவ சிப்பாய்களுக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறை : இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு". உதயன். 7 அக்டோபர் 2015. 10 அக்டோபர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Four Sri Lankan soldiers convicted of raping Tamil woman". பிபிசி. 7 அக்டோபர் 2015. 10 அக்டோபர் 2015 அன்று பார்க்கப்பட்டது.