2-ஐதராக்சி-4-(மெத்தில்தயோ)பியூட்டைரிக் அமிலம்
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
583-91-5 | |
ChEBI | CHEBI:137228 |
ChEMBL | ChEMBL2104213 |
ChemSpider | 10946 |
DrugBank | DB15832 |
EC number | 209-523-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11427 |
| |
UNII | Z94465H1Y7 |
பண்புகள் | |
C5H10O3S | |
வாய்ப்பாட்டு எடை | 150.19 g·mol−1 |
தோற்றம் | நிறமற்றது அல்லது வெண்மை நிற திண்மம் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H315, H318, H412 | |
P264, <abbr class="abbr" title="Error in hazard statements">P264+265, P273, P280, P302+352, <abbr class="abbr" title="Error in hazard statements">P305+354+338, <abbr class="abbr" title="Error in hazard statements">P317, P321, <abbr class="abbr" title="Error in hazard statements">P332+317, <abbr class="abbr" title="Error in hazard statements">P362+364, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2-ஐதராக்சி-4-(மெத்தில்தயோ)பியூட்டைரிக் அமிலம் (2-Hydroxy-4-(methylthio)butyric acid) என்பது C5H10O3S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதனுடைய கட்டமைப்பு வாய்பாட்டை CH3SCH2CH2CH(OH)CO2H. என்று எழுதலாம். வெண்மையாக திண்ம நிலையில் இச்சேர்மம் காணப்படுகிறது. வேதி வினைக்குழுக்கள் என்ற அடிப்படையில் நோக்கினால் இதுவோர் ஆல்பா ஐதராக்சிகார்பாக்சிலிக்கு அமிலமும் தயோயீத்தரும் சேர்ந்த சேர்மம் ஆகும். கட்டமைப்பு ரீதியாக இதை அமீனுக்குப் பதிலாக ஐதராக்சி குழு இடம்பெற்றுள்ள ஓர் அமினோ அமில மெத்தியோனின் என்று தொடர்புபடுத்தலாம்.
தயாரிப்பு
[தொகு]வணிகரீதியாக அக்ரோலினில் இருந்து சமதிருப்ப வடிவத்தில் 2-ஐதராக்சி-4-(மெத்தில்தயோ)பியூட்டைரிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. இமுமுறையில் அக்ரோலினுடன் மீத்தேன்தயோலை இணைத்து விளைபொருளுடன் தொடர்ந்து ஒரு சயனோவைதரின் நீராற்பகுப்பு மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.[2] இது கால்நடை தீவனத்தில் மெத்தியோனினுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது.[3]
இயற்கையில், இச்சேர்மம் 3-டைமெதில்சல்போனியோபுரோப்பியோனேட்டின் உயிரியக்கச் செயல்முறையில் ஓர் இடைநிலை வேதிப்பொருளாகும். இது இயற்கையான டைமெத்தில் சல்பைடின் முன்னோடிச் சேர்மமுமாகும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2-Hydroxy-4-(methylthio)butyric acid". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 April 2022.
- ↑ Rey, Patrick; Rossi, Jean-Christophe; Taillades, Jacques; Gros, Georges; Nore, Olivier (2004). "Hydrolysis of Nitriles Using an Immobilized Nitrilase: Applications to the Synthesis of Methionine Hydroxy Analogue Derivatives". Journal of Agricultural and Food Chemistry 52 (26): 8155–8162. doi:10.1021/jf048827q. பப்மெட்:15612811.
- ↑ Lemme, A.; Hoehler, D.; Brennan, JJ; Mannion, PF (2002). "Relative Effectiveness of Methionine Hydroxy Analog Compared to DL-Methionine in Broiler Chickens". Poultry Science 81 (6): 838–845. doi:10.1093/ps/81.6.838. பப்மெட்:12079051. https://archive.org/details/sim_poultry-science_2002-06_81_6/page/838.
- ↑ Curson, Andrew R. J.; Liu, Ji; Bermejo Martínez, Ana; Green, Robert T.; Chan, Yohan; Carrión, Ornella; Williams, Beth T.; Zhang, Sheng-Hui et al. (2017). "Dimethylsulfoniopropionate Biosynthesis in Marine Bacteria and Identification of the Key Gene in this Process". Nature Microbiology 2 (5): 17009. doi:10.1038/nmicrobiol.2017.9. பப்மெட்:28191900. https://ueaeprints.uea.ac.uk/id/eprint/62649/1/Todd_Figure_1.pdf.