1992 ஒடிசா மதுபான மரணங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1992 ஒடிசா மதுபான மரணங்கள் (1992 Odisha liquor deaths) இந்தியாவின் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் 1992 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்தன. சட்டவிரோதமாக காய்ச்சப்பட்ட கள்ளச் சாராயம் குடித்து 200 எண்ணிகைக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் ; மேலும் 600 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தியாவில் நடந்த மிகப்பெரிய சோகங்களில் ஒன்றாகும்..

ஒடிசா மாநில அரசாங்கம் 1994 ஆம் ஆண்டில் மதுவிலக்கை விதித்தது; இருப்பினும், 1995 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த இந்திய தேசிய காங்கிரசு அரசாங்கம், வருமானத்தில் பெரும் இழப்பை ஏற்படுத்துவதாகக் கூறி தடையை நீக்கியது. 2000- ஆம் ஆண்டு இந்த வழக்கில் பெலு என்கிற சாராய மன்னன் சுரேந்திரநாத் தாசை காவல்துறையினர் கைது செய்தனர். [1] [2] [3] குற்றம் சாட்டப்பட்டவர் கீழ் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டார் மற்றும் மேல்முறையீட்டில், ஒடிசா உயர் நீதிமன்றம் 1992 கட்டாக்கில் சோகத்தின் பிரதான குற்றவாளியான பெலு என்ற சுரேந்திர தாசுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "200 Die From Contaminated Liquor in India - NYTimes.com". The New York Times. Orissa (India); India. 11 May 1992. பார்க்கப்பட்ட நாள் 9 July 2010.
  2. "Deadly concoctions". Frontlineonnet.com. 16 July 1991. பார்க்கப்பட்ட நாள் 9 July 2010.
  3. "Special: Death in the bottle: Kerala's illegal liquor tragedy". Rediff.com. 2 November 2000. பார்க்கப்பட்ட நாள் 9 July 2010.
  4. "HC confirms lifer for hooch case kingpin". The Telegraph. 30 October 2011. https://www.telegraphindia.com/odisha/hc-confirms-lifer-for-hooch-case-kingpin/cid/340630. பார்த்த நாள்: 10 November 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=1992_ஒடிசா_மதுபான_மரணங்கள்&oldid=3786657" இலிருந்து மீள்விக்கப்பட்டது