1982 பொதுநலவாய விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
12 ஆவது பொதுநலவாய விளையாட்டுகள்
XII Commonwealth Games
நடத்தும் நகரம்பிரிஸ்பேன், குயின்ஸ்லாந்து, Australia
குறிக்கோள்நட்புறவுப் போட்டிகள்
பங்கேற்கும் நாடுகள்46
பங்கேற்கும் போட்டியாளர்கள்1,583
நிகழ்ச்சிகள்141 நிகழ்வுகள், 12 விளையாட்டுகள்
துவக்க விழா30 செப்டம்பர்
நிறைவு விழா9 அக்டோபர்
அலுவல்முறை துவக்கம்இளவரசர் பிலிப்பு, எடின்பரோ கோமகன்
Main venueராணி இரண்டாம் எலிசபெத்து விளையாட்டரங்கம்
<  1978 பொதுநலவாய விளையாட்டுகள் 1986 பொதுநலவாய விளையாட்டுகள்  >
1982 ,செப்டம்பர் 30 காமன்தொவெல்த்  விளையாட்டுக்கள்  தொடக்க விழா நிகழ்வு 

1982 பொதுநலவாய விளையாட்டுக்கள் (1982 Commonwealth Games) ஆத்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்திலுள்ள பிரிசுபேன் நகரத்தில் 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. திறப்பு விழா பிரிசுபேன் நகரத்தின் புறநகர்ப் பகுதியான நாதனில் உள்ள ராணி இரண்டாம் எலிசபெத்து விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த அரங்கத்தில் இந்நிகழ்வின் தடகள மற்றும் வில்வித்தை போட்டிகள் நடைபெற்றன.[1] மற்ற நிகழ்வுகள் சாண்ட்லரில் உள்ள சிலீமன் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றன.

நீதிபதி எட்வார்டு வில்லியம்சு 1982 பொதுநலவாய விளையாட்டுக்களின் தலைவராக இருந்தார்.[2] 1978 ஆம் ஆன்டு நட்டைபெற்ற தேசியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பாவ்லோ பெரீரா போட்டிக்கான சின்னத்தை வடிவமைத்தார்.[3]

பங்கேற்பாளர்கள்[தொகு]

1982 பொதுநலவாய  விளையாட்டுபோட்டிகளில்  பங்கேற்ற நாடுகள்

காமன்வெல்த் அமைப்பின் 46 உறுப்பு நாடுகளும் அதன் ஆட்சி பகுதியில் இருந்தும் சுமார் 1582 தடகள வீரர்கள் பங்கேற்றனர் .

விளையாட்டுக்கள்[தொகு]

தடகளம், வில்வித்தை, இறகுப்பந்து, குத்துச்சண்டை, மிதிவண்டி, துப்பாக்கி சுடுதல், நீச்சல், பளு தூக்குதல் மற்றும் மல்யுத்தம் போன்ற பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Queensland Sport and Athletic Centre". Austadiums.com. பார்க்கப்பட்ட நாள் 2016-08-28.
  2. "Commemorating the life of Sir Edward Williams". 2004. Supreme Court of Queensland Library. Archived from the original on 20 July 2008. பார்க்கப்பட்ட நாள் 7 December 2015.
  3. "Archived copy". Archived from the original on 22 June 2005. பார்க்கப்பட்ட நாள் 2007-02-08.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

புற இணைப்புகள்[தொகு]