உள்ளடக்கத்துக்குச் செல்

1926 பின்னி ஆலை வேலைநிறுத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1926 ஆம் ஆண்டின் பின்னி ஆலை வேலைநிறுத்தம் (1926 Binny Mills Strike) பெங்களூரில் உள்ள கம்பளி, பருத்தி மற்றும் பட்டு ஆலையில் நடைபெற்ற ஒரு பொது வேலைநிறுத்தமாகும். இது 1926 பெங்களூர் பின்னி ஆலை வேலைநிறுத்தம் எனப்படுகிறது.[1] இந்த வேலைநிறுத்தம் இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.

காரணங்கள்

[தொகு]

1925ஆம் ஆண்டில், மைசூர் மாநில அரசாங்கம் 1914ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தில் திருத்தம் செய்தது. இது வேலை நேரங்களைக் குறைக்கவும், ஊதியங்களை அதிகரிக்கவும், பணியிட நிலைமையினை மேம்படுத்தவும் பரிந்துரைத்தது. இதனால் தொழிலாளர்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]