பின்னி அண்டு கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பின்னி அண்டு கோ (Binny and Co) என்பது சென்னை நகரில் கப்பல், நெசவு, வங்கி, இன்சூரன்சு போன்ற தொழில்களைச் செய்த பெரிய குழுமம் ஆகும். இது சென்னையில் 200 ஆண்டுகளுக்கு முன் மிகப் பெரிய வணிக நிறுவனமாக விளங்கி வந்தது. [1]

1797 ஆம் ஆண்டில் பின்னி அண்டு குழுமம் சான் பின்னி என்பவரால் தொடங்கப்பட்டது. கப்பல்களில் சரக்குகளை அனுப்புவதற்கும் பெறுவதற்குமான முகவாண்மை அலுவல்களைச் செய்தது. முதலில் அண்ணா சாலையில் அமீர் பாக் என்ற கட்டடத்தில் இதன் அலுவலகம் இருந்தது. பிறகு சில கட்டடங்கள் தாண்டி தற்பொழுது தாஜ் கன்னிமரா விடுதி இருக்கும் இடத்தில் மாறியது. பின்னர் 1812 ஆம் ஆண்டில் அரண்மனைக்காரன் தெருவில் உள்ள ஒரு கட்டடத்திற்கு மாறியது. பின்னர் தன் தொழிலை விரிவுபடுத்தும் வகையில் வங்கி மற்றும் இன்சூரன்சு தொழில்களில் இறங்கியது. டெனிசன் என்பவருடன் கூட்டு சேர்ந்து 1800 ஆம் ஆண்டில் பின்னி அண்ட் டெனிசன் என்று குழுமத்தின் பெயரை மாற்றி அமைத்தனர்.

பிரிட்டிசு இந்தியா ஸ்டிம் நேவிகேசன் குழுமத்தின் முகவர்களாக இயங்கியது. பேருந்து சேவையையும் தொடங்கி நடத்தியது. மெட்றாஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் அன்ட் இண்டஸ்டரியை பின்னி அண்டு கோ தொடங்கியது. பின்னி ஆண்டு கோ 1876 இல் பங்கிங்காம் ஆலையையும் பின்னர் 1881 இல் கர்னாட்டிக் ஆலையையும் தொடங்கியது. இவ்விரண்டு நிறுவனங்களும் 1920 இல் இணைந்து பங்கிங்காம் அண்ட் கர்னாடிக் மில்ஸ் என்னும் பெயர் பெற்றது. மேலும் தொடர்ந்த வளர்ச்சியில் பெங்களுருவில் 1884 ஆம் ஆண்டில் பெங்களூர் காட்டன் சில்க் அன்ட் உல்லன் மில்ஸ் என்னும் பெயரில் அமைக்கப்பட்டது

1906 அக்டோபர் 22 இல் ஏற்பட்ட ஆர்புத்நாட் வங்கி மூடியதன் காரணமாக, பின்னி ஆண்டு கோ இழப்புக்கு உள்ளாகியது. இந்தியா விடுதலை பெற்றதும் மேலும் சறுக்கல்கள் உருவாகின. 1970 க்குப் பிறகு பங்கிங்காம் அண்ட் கர்னாடிக் மில்ஸ் குழுமமும் வீழ்ச்சியுறத் தொடங்கியது. 1996 இல் செயல்பாடுகள் நின்றன. 2001 இல் மில்கள் விற்கப்பட்டன.[2]

சான்றாவணம்[தொகு]

  1. S.MUTTIAH. "The Hindu : A 200-year old chapter ends". www.thehindu.com.
  2. "CHEQUERED HISTORY OF A TEXTILE COMPANY". Times of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்னி_அண்டு_கோ&oldid=2941274" இருந்து மீள்விக்கப்பட்டது