19-ஆம் நூற்றாண்டு தமிழ் மருத்துவ நூல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

19-ஆம் நூற்றாண்டில் வெளியான தமிழில் வெளியான மருத்துவம் பற்றிய நூல்களின் பட்டியல் கீழே உள்ளது. இவை ஐரோப்பியர் இந்தியாவுக்கு வந்த பின்னர் மேலை நாட்டு மருத்துவத்தை பின்பற்றி எழுதப்பட்ட நூல்கள்[1]. ஒரு சில நூல்களில் மிகச் சிறிதளவு ஆயுர்வேத, சித்த முறை பற்றிய செய்திகளும் அடங்கியுள்ளன.

  1. பூமி சாஸ்திரம் (1832) - 250 பக்கங்களைக் கொண்ட முதல் தமிழ் மருத்துவ நூல் இரேனியசு என்பவர் எழுதினார். இந்நூல் பின்னர் பாடநூலாகவும் பயன்பட்டது[1]
  2. சுகாதார விளக்கம் (1894)
  3. மருத்துவ மாணாக்கியர்களுக்கும் சென்னை வைத்திய் வித்தியாசாலையில் கீழ்வகுப்பு மாணாக்கர்கட்கும் உபயோகமான கைப்புத்தகம் (1895)
  4. நோயில்லா வாழ்வு (1895)
  5. சுகாதார விளக்கம் (1896)
  6. சுகவழிச் சுருக்கம் (1896)
  7. சுகாதார விளக்கமும் வினாவும் (1898)
  8. சுகாதார விளக்கமும் வினாவிடையும் (1898)
  9. சுகாதார விளக்கம் (1899)
  10. ம. ஜகன்னாதரின் சரீர வினா-விடை (1866)
  11. கிரேயின் அங்காதி பாதம் (1872)
  12. மானிட ரகசியம் என்னும் சரீர சாஸ்திரம் (1900)
  13. சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் 4640 பக்கங்களில் தன் மாணவர்களின் உதவியுடன் மேலை நாட்டு மருத்துவத்தையும் அறிவியலையும் மொழிபெயர்த்தார்.
    1. கல்வின் கட்டரின் அங்காதிபாதம் சுகரணவாதம் உற்பாவனம் நூல் 204 பக்கம் (1852, 1857)
    2. மேன் செல்லின் பிரசவ வைத்தியம் பக்கம் 258 (1857)
    3. துருவிதரின் இரண வைத்தியம், பக்கம் 504, (1867)
    4. கிரேயின் மனுஷ அங்காதி பாதம், பகக்ம் 838 (1872)
    5. கூப்பரின் வைத்தியாகரம், பக்கம் 917 (1872)
    6. மனுஷ சுகரண கலைச்சொற்கள், பக்கம் 134 (1872)
    7. அருஞ்சொல் அகராதி, பக்கம் (??) (1875)
    8. வெல்சின் கெமிஸ்தம் - பக்கம் 516 (1875)
    9. டால்தனின் மனுஷ சுகரணம் - பக்கம் 590, (1883)
    10. வா நிங்கின் சிகிச்சா வாகடம் - பக்கம் 574 (1888)
      1. (மேலே உள்ள நூல்கள் யாவும் சாமுவேல் ஃபிஷ்கிறீன் அவர்களின் மேற்பார்வையில் மொழிபெயர்க்கப்பட்டு திருத்தப்பெற்றவை. தனெல். பி. சப்மன் 3 நூலும், ய. டன்வதர் ஒரு நூலும், பவுல் ஒரு நூலும், மொழிபெயர்த்தனர். சாமுவேல் ஃபிஷ்கிறீனின் மாணவர்களும் சேர்ந்து மொழி பெயர்த்தனர்)
  14. மா. ஜெகந்நாதநாயுடு, பதார்த்தகுணரத்நாகரம் (1867)
  15. மா. ஜெகந்நாதநாயுடு, பைஷ ஜகல்பம் (1879)
  16. மா. ஜெகந்நாதநாயுடு, இங்கிலீஷ் வைதியசங்கிரகம் (1906)
  17. மா. ஜெகந்நாதநாயுடு, பிரசவ வைத்தியம் (காலம்??)
  18. டாக்டர் தனுஷ்கோடி ராஜா, சுகாதார, துப்புரவிற்கான நூல் (1869). இது 1000 படிகள் அடிக்கப்பட்டது. இது அரசின் அறிவுரைப்படி தெலுங்கு மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டது
  19. ஏ. ஜா. உவேரிங் துரை, மருத்துவர் இல்லாத ஊர் மக்களுக்கு மருந்தியல் நூல் (1843)

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. 1.0 1.1 சு. நரேந்திரன் (பதிப்பாசிரியர்:இராதா செல்லப்பன்) (2008). மருத்துவத் தமிழ் வரலாறும் வளர்ச்சியும் (நூல்:பல்கலைத் தமிழ்-அறிவியல் தமிழ்). திருச்சிராப்பள்ளி: பாரதிதாசன் பல்கலைக்கழகம். பக். 252.