1876-79 வட சீனப்பஞ்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குழந்தைகளை விற்கும் காட்சி சீனப் பஞ்சம் (1878)

1876-79 ஆம் ஆண்டின் வட சீனப் பஞ்சம் சீனாவில் சிங் வம்சத்தின் ஆட்சியின் போது நடந்தது. இந்த வறட்சி 1875 ஆம் ஆண்டில் வட சீனாவில் தொடங்கியது, அடுத்தடுத்த ஆண்டுகளில் பயிர்கள் வளர்ச்சியின்றி இருந்ததால் மிகப்பெரிய பஞ்சமாக வெடித்தது. சான்ஸி, ஜிலி, ஹெய்நான், சாங்டோங் மற்றும் ஜியாங்சு மாவட்டத்தின் வடக்குப் பகுதிகள் இப்பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட இடங்கள். பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட ஐந்து மாகாணங்களில் மொத்த மக்கள்தொகையான 108 மில்லியன் மக்களில் 9-13 மில்லியன் மக்கள் இறந்தனர். [1]

இப்பஞ்சத்தை ஏற்படுத்திய கடும் வறட்சி என்சோ எனப்படும் எல் நினோ-தென் அலைவின் தாக்கத்தால் ஏற்படுத்தப்பட்டது. [2]

பஞ்சம் மற்றும் நிவாரண முயற்சிகள்[தொகு]

பிரிட்டிஷ் மதப் போதகரான டிமோதி ரிச்சர்ட் முதன்முதலில் 1876 கோடைகாலத்தில் சாங்டோங்கில் வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள பஞ்சத்திற்கு சர்வதேச கவனத்தை ஈர்த்தார். ஷாங்காயில் உள்ள வெளிநாட்டு சமூகத்தினரிடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அவர் பணம் வசூலித்தார். மார்ச் 1877 இல், சாண்டோங் பஞ்சம் நிவாரண குழுவானது இராஜதந்திரிகள், வணிகர்கள், மற்றும் புராட்டஸ்டன்ட் மற்றும் ரோமன் கத்தோலிக்க மதப் போதகர்களின் பங்கேற்புடன் நிறுவப்பட்டது. [3]

அண்டை மாகாணமான சான்சி மாகாணத்தில் வறட்சி நிலைமைகள் சான்டோங்கை விட மோசமடைந்துள்ளன என்பதை ரிச்சார்டுக்கு தெரியவந்தது. 1878 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ரிச்சர்ட் சான்சிக்கு பயணித்தார். அவரது "பஞ்சம் நாட்குறிப்பு" சூழ்நிலைகளை விவரிக்கிறது. "மக்கள் தங்கள் மனைவிகளையும், மகள்களையும் விற்றனர், வேர்கள், அழுகிய உடல்கள், இலைகள் ஆகியவற்றை சாப்பிடுகின்றனர் என விவரிக்கிறார்.[4]

பஞ்சத்தில் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளான மாகாணம் சான்சி. சான்சியின் மொத்த மக்கட்தொகையான 15 மில்லியன் மக்களில் 5.5 மில்லியன் மக்கள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. தொலைதூரத்தில் இருக்கும் மாவட்டங்கள் மற்றும் அணுக முடியாத கிராமப்புற மாவட்டங்களில் பெரும்பாலானவை பாதிக்கப்பட்டன. [5]

பஞ்சத்தை எதிர்த்துப் போராட நன்கொடை வேண்டி ஒரு சர்வதேச வலைப்பின்னல் அமைக்கப்பட்டது. இந்த வலைப்பின்னல்களுக்கு பெரும்பாலான நிதி இங்கிலாந்து மற்றும் அந்நிய நாடுகளுடன் வைத்திருந்த வணிகத்தின் மூலம் திரட்டப்பட்டது. இந்த முயற்சியால் 204,000 வெள்ளி டால்சு (நாண்யங்கள்) திரட்டப்பட்டன. இது 2012 ஆம் ஆண்டில் $7-10 மில்லியனுக்கு சமமானதாகும். ரோமன் கத்தோலிக்கர்கள் குறைந்தது 125,000 டால்சுவை (சுமார் $5 மில்லியன்) திரட்டினர். [6]

மழை[தொகு]

1879 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பஞ்சம் இருந்த பகுதிகளில் கடுமையான மழை பெய்ததால், பயிர் அறுவடை செய்யப்பட்டு பஞ்சம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. [7]

குறிப்புகள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • டேவிஸ், மைக் (2003). லேட் விக்டோரியன் ஹோலோகாஸ்ட்ஸ் : எல் நினோ ஃபெமைன்சு அண்ட் தி மேக்கிங் ஆப் தி தேர்ட்டு வேர்ல்ட் . லண்டன்: வெர்சோ. ஐஎஸ்பிஎன்   978-1859843826 .
  • 光绪 年年 (1876-1879) 华北 的 大 ஹான்-வை ஹோ (何汉威).
"https://ta.wikipedia.org/w/index.php?title=1876-79_வட_சீனப்பஞ்சம்&oldid=3230216" இருந்து மீள்விக்கப்பட்டது