1,3-டைபுளோரோ-டிரைசல்பேன்-1,1-டைபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1,3-டைபுளோரோ-டிரைசல்பேன்-1,1-டைபுளோரைடு (1,3-Difluoro-trisulfane-1,1-difluoride) என்பது கந்தகம் புளோரினுடன் குறைந்த ஆக்சிசனேற்ற நிலையில் உள்ள ஒரு கனிம மூலக்கூற்றுச் சேர்மமாகும். SF3SSF என்ற கட்டமைப்பு வாய்ப்பாட்டில் மூன்று கந்தக அணுக்களின் சங்கிலி ஒன்று உள்ளது. ஒரு முனையில் மூன்று புளோரின் அணுக்கள் மற்றொரு புளோரின் அணுவுடன் பிணைந்துள்ளன. S3F4 என்றும் இதன் வாய்ப்பாட்டை எழுதலாம். -62°செல்சியசு வெப்பநிலை உருகுநிலையும், 94°செல்சியசு வெப்பநிலை கொதிநிலையையும் 1,3-டைபுளோரோ-டிரைசல்பேன்-1,1-டைபுளோரைடு பெற்றுள்ளது. ஒரு வாயுவாக இது நிலைத்தன்மையற்று SSF2 மற்றும் SF4 சேர்மங்களாக உடைகிறது[1]. கந்தக டைபுளோரைடு மற்றும் SSF2 இன் சமபகுதியன் ஒன்றும் ஒடுக்க வினையில் ஈடுபடுவதால் SF3SSF உண்டாகிறது[2]. S3F4 ⇌ SSF2 + SF2 என்ற இவ்வினை 6 கி.யூ/மோல் வெப்பத்தைப் பய்ன்படுத்துகிறது[3].

FSSF2SF என்பது S3F4 இன் சாத்தியமுள்ள மாற்றியன் ஆகும். இது உடனடியாக புளோரினை இடம்பெயர்த்து F2SSSF2 என்ற மாற்றியனையும் இது உடனடியாக உடைந்து SF2 மற்றும் SSF2.சேர்மங்களாக மாறுகின்றன. மூன்று SF2 அலகுகள் கொண்டுள்ள வளைய மாற்றியன் உயராற்றல் கட்டமைப்பாகக் கருதப்படுகிறது[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. Willner, Helge (July 1984). "Chalkogenfluoride in niedrigen Oxydationsstufen. IX. Darstellung und Charakterisierung von SF3SSF". Zeitschrift für anorganische und allgemeine Chemie 514 (7): 171–178. doi:10.1002/zaac.19845140721. 
  2. Berry, F. J. (1984). "Chapter 6. O, S, Se, Te". Annual Reports Section "A" (Inorganic Chemistry) 81: 145. doi:10.1039/IC9848100137. 
  3. Lösking, O.; Willner, H.; Baumgärtel, H.; Jochims, H. W.; Rühl, E. (November 1985). "Chalkogenfluoride in niedrigen Oxydationsstufen. X Thermochemische Daten und Photoionisations-Massenspektren von SSF2, FSSF, SF3SF und SF3SSF". Zeitschrift für anorganische und allgemeine Chemie 530 (11): 169–177. doi:10.1002/zaac.19855301120. 
  4. Jug, Karl; Iffert, Rüdiger (April 1989). "SINDO1 study of sulphur isomers and sulphur fluorine compounds". Journal of Molecular Structure: THEOCHEM 186: 347–359. doi:10.1016/0166-1280(89)87055-1.