உள்ளடக்கத்துக்குச் செல்

1,3-இருபீனைல்யூரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1,3-இருபீனைல்யூரியா
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
என்,என்-இருபீனைல்யூரியா
வேறு பெயர்கள்
1,3-இருபீனைல்யூரியா; டைபீனைல்யூரியா; கார்பனிலைடு
இனங்காட்டிகள்
102-07-8 Y
Beilstein Reference
782650
ChEBI CHEBI:41320
ChEMBL ChEMBL354676
ChemSpider 7314
DrugBank DB07496
EC number 203-003-7
Gmelin Reference
143821
InChI
  • InChI=1S/C13H12N2O/c16-13(14-11-7-3-1-4-8-11)15-12-9-5-2-6-10-12/h1-10H,(H2,14,15,16)
    Key: GWEHVDNNLFDJLR-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7595
  • c1ccc(cc1)N/C(=N\c2ccccc2)/O
UNII 94YD8RMX5B Y
பண்புகள்
C13H12N2O
வாய்ப்பாட்டு எடை 212.25 g·mol−1
உருகுநிலை 239–241 °C (462–466 °F; 512–514 K)
கொதிநிலை 262 °C (504 °F; 535 K)
-127.5·10−6செ.மீ3/மோல்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H312, H332
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+312, P304+340, P312, P322, P330, P363, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1,3-இருபீனைல்யூரியா (1,3-Diphenylurea) என்பது C13H12N2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். (PhNH)2CO (Ph = C6H5) என்ற சுருக்க வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். பீனைல்யூரியா வகைச் சேர்மமாக வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் நிறமற்ற திடப்பொருளாகும். யூரியாவை அனிலினுடன் சேர்த்து மாற்றமைடேற்றம் செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. ஓர் அமைடு அமீனுடன் சேர்ந்து வினைபுரிந்து ஒரு புதிய அமைடை உருவாக்கும் வினை மாற்றமைடேற்ற வினை எனப்படும்.

இருபீனைல்யூரியா என்பது சைட்டோகினின் எனப்படும் ஒரு வகையான தாவர இயக்குநீராகும். மலர் வளர்ச்சியை இது தூண்டுகிறது. இருபீனைல்யூரியாவின் தாவர இயக்குநீர் விளைவு ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. ஆனால் மற்ற அதிக சக்திவாய்ந்த பீனைல்யூரியா வகை தாவர இயக்குநீர்கள் பதிவாகியுள்ளன.[1]

தேங்காய் பாலில் 1,3-இருபீனைல்யூரியா இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Effect of cytokinin-active phenylurea derivatives on shoot multiplication. T. Genkov and I. Ivanova, Bulg. J. Plant Physiol., 1995, 21(1), pages 73–83 (link to article at researchgate)
  2. Shantz, E. M.; Steward, F. C. (1955). "The Identification of Compound A from Coconut Milk as 1,3-Diphenylurea.". Journal of the American Chemical Society 77 (23): 6351. doi:10.1021/ja01628a079. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,3-இருபீனைல்யூரியா&oldid=4087583" இலிருந்து மீள்விக்கப்பட்டது