ஹொங் ஹாம் குடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹொங் ஹாம் குடா கடல் பகுதி

ஹொங் ஹாம் குடா (Hung Hom Bay) என்பது ஹொங்கொங், கவுலூன் பகுதியில் ஹொங் ஹாம் நகரத்தை அண்டியிருக்கும் (இருந்த) ஒரு குடாவாகும். இது ஹொங்கொங்கின் இயற்கை துறைமுகங்களில் ஒன்றான விக்டோரியா துறைமுகம் கடலோடு இணைந்தப் பகுதியாகும்.

வரலாறு[தொகு]

பிரித்தானியர் ஹொங்கொங்கை கைப்பற்றியக் காலமான 1850 ஆம் ஆண்டு முதலே இந்த குடா கடல் பரப்பு, பலமுறை கடலை நிரப்பி நிலம் மீட்பு திட்டங்களுக்கு உள்ளானது. 1996 ஆண்டு காலவரையில் இந்த குடாப் பகுதி கிட்டத்தட்ட மறைந்த நிலையை அடைந்தது. இந்த குடா கடல் பரப்போரமாக இருந்த பாறைகள் மலைக்குன்றுகள் போன்றனவும் தரைமட்டமாக்கப்பட்டு உருவான பகுதிகளே தற்போது சிம் சா சுயி கிழக்கு மற்றும் ஹொங் ஹாம் எம்டிஆர் தொடருந்தகம் அமைக்கப்பட்டிருக்கும் இடம் போன்றவைகளாகும்.

தற்போது மீதமுள்ள குடா பகுதியும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டட நிர்மாணப் பணிகளுக்காக நிரப்பப்பட்டு வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொங்_ஹாம்_குடா&oldid=1358913" இலிருந்து மீள்விக்கப்பட்டது