ஹொங் ஹாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹொங் ஹாமின் வானளாவிய கட்டடங்கள் (2009)
ஹொங்கொங் பல்தொழில் நுட்பப் பல்கலைக்கழகம்
வம்போ கப்பல் கட்டடம் ஹொங் ஹாம் நகரின் அழகிய ஒரு கட்டடம்

ஹொங் ஹாம் (Hung Hom) என்பது ஹொங்கொங்கின் என்பது கவுலூன் நகர மாவட்டம், கவுலூன் பகுதியில் உள்ள ஒரு நகரம். இது சிம் சா சுயி நகரத்துக்கு அருகில் உள்ளது. ஹொங் ஹாம் நகரம் மிகுதியான மக்கள் குடியிருப்புத் தொகுதிகளைக் கொண்ட ஒரு நகரம். அத்துடன் வணிகம் மற்றும் தொழில் மையங்களையும் கொண்டுள்ளது. இந்த நகரின் தெற்காக விக்டோரியா துறைமுகம் உள்ளது. அத்துடன் ஹொங் ஹாம் குடா பகுதி ஹொங்கொங்கின் நிலமீட்பு கட்டுமானப் பணியின் ஒரு பகுதியும் ஆகும்.

மக்கள்[தொகு]

ஹொங் ஹாம் நகரம் யப்பானியர் செறிந்து வாழும் ஒரு இடமாகும். அத்துடன் கொரியர்கள், பாக்கிச்சுத்தானியர்கள், இந்தியர்கள் கூடுதலாக வாழும் பகுதிகளில் இதுவும் ஒன்று ஆகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொங்_ஹாம்&oldid=2299766" இருந்து மீள்விக்கப்பட்டது