ஹைன்ரிச் ஹிம்லர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஹைன்ரிச் லுயிட்போல்ட் ஹிம்லர் | |
---|---|
![]() | |
ரெயக்ஸ்பியூரர்-SS | |
பதவியில் 1929–1945 | |
தலைவர் | அடால்ப் இட்லர் |
முன்னவர் | எர்ஹட் எய்டன் |
பின்வந்தவர் | கார்ல் ஹோங்க் |
ஜெர்மனிக் கூட்டாட்சி உள்துறை அமைச்சர் | |
பதவியில் 1943–1945 | |
வேந்தர் | அடால்ப் இட்லர் |
முன்னவர் | வில்ஹெல்ம் பிரிக் |
பின்வந்தவர் | வில்ஹெல்ம் ஸ்டக்கர்ட் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 7 அக்டோபர், 1900 மியூனிக், பவேரியா, ஜெர்மனி |
இறப்பு | 23 மே, 1945 (வயது 44) லுன்பர்க், லோயர் சாக்சனி, ஜெர்மனி |
அரசியல் கட்சி | தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி (NSDAP) |
வாழ்க்கை துணைவர்(கள்) | மார்கரேட் போட் |
ஹைன்ரிச் லுயிட்போல்ட் ஹிம்லர் (Heinrich Himmler (உதவி·தகவல்)) (அக்டோபர் 7, 1900- மே 23, 1945) என்ற முழுப்பெயர் கொண்ட இம்லர் நாசி ஜெர்மன் அரசியலில் மிக முக்கியப்பங்கு வகித்தவர். இவர் உடன் இருந்த மற்ற அரசியல் தலைவர்களுட்ன ஒப்பிடுகையில் இவர் அதிக அரசியல் பலம் கொண்டவர் இட்லரின் மதிப்புக்குரியவர். எஸ் எஸ் படைப்பிரிவின் தளபதியாக, ரெய்க்ஸ் பியூரர் எஸ் எஸ் ஆக பதவி வகித்தவர். இவர் ஆளுமையின் கீழ்தான் ஜெர்மனியின் அனைத்து நாசிச் சிறைச்சாலைகளும் இயங்கின. இவர் ரோமானியர்களையும், யூதர்களையும் கொன்று குவித்ததின் எண்ணிக்கை 2 இலட்சத்திலிருந்து 60 இலட்சம் வரை நீள்கிறது. அது மட்டுமில்லாமல் போர்க்கைதிகளையும், பொதுவுடமைவாதிகளையும், புரட்சியாளர்களையும், ஒரினச்சேர்க்கையில் ஈடுபடுவர்களையும், மன நலம் குன்றியவர்கள் என்று இவர் கொன்றவர்களின் எண்ணிக்கை 40 இலட்சமாகும். உலகப்போரின் முடிவில் இவர் மீதுள்ள குற்றங்களை கைவிடுவதென்றால் சரணடைவதாக நேசநாட்டுப் படையினருக்கு நிபந்தனை விதித்தார் . பின்னர் பிரித்தானியப் படையினரால் கைது செய்யப்பட்டு மே 23, 1945 ல் நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தின் முன் நிறுத்தப்பட்டார் அங்கு ஆணையத்திற்கு பதிலளிக்குமுன் சயனைட் நஞ்சை உட்கொண்டு தற்கொலை புரிந்தார்.