ஹேரல்ட் & குமார் கோ டு வைட் காசில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹேரல்ட் & குமார் கோ டு வைட் காசில்
இயக்கம்டானி லைனர்
தயாரிப்புகிரெக் ஷபிரோ
கதைஜான் ஹர்விட்ஸ்
ஹேடென் ஷுலோசன்பர்க்
இசைடேவிட் கிடாய்
நடிப்புகால் பென்
ஜான் சோ
விநியோகம்நியூ லைன் சினிமா
வெளியீடுஜூலை 30, 2004
ஓட்டம்88 நிமிடங்கள்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$9 மில்லியன் (மதிப்பு)
பின்னர்ஹேரல்ட் & குமார் எஸ்கேப் ஃப்ரம் குவாண்டானமோ பே

ஹேரல்ட் & குமார் கோ டு வைட் காசில் (Harold & Kumar Go to White Castle) 2004ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில நகைச்சுவைத் திரைப்படமாகும். டானி லைனர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜான் சோ, கால் பென், பாலா கார்செஸ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஆசிய-அமெரிக்க நடிகர்கள் பிரதான நடிகராக இருந்த ஆங்கிலத் திரைப்படங்களில் இத்திரைப்படம் ஒன்றாகும். இதன் பிந்தைய படம், ஹேரல்ட் & குமார் எஸ்கேப் ஃப்ரம் குவாண்டானமோ பே, ஏப்ரல் 2008ல் வெளிவருகிறது.

வகை[தொகு]

நகைச்சுவைப்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ஹேரல்ட் (ஜான் சோ), ஒரு கொரிய-அமெரிக்க வங்கியாளர், மற்றும் குமார் (கால் பென்), ஒரு இந்திய-அமெரிக்க கல்லூரி மாணவர், இரு தோழர்களும் ஒரு அறையில் சேர்ந்து வாழ்துகிறார். ஒரு நாள் இருவரும் சேர்ந்து கஞ்சத்தை பிடித்து வெறிகொள்ளி "வைட் காசில்" என்ற "fast food" உணவகத்தின் சாப்பாட்டை ஆசைப்பட்டு இந்த உணவகத்தைத் தேடிப் போகிறார். தேடும்பொழுது இருவரும் பல தொந்தரைகளை அனுபவித்து கடைசியில் "வைட் காசில்" உணவகத்தை கண்டுபிடித்து இருவரும் 50 ஹாம்பர்கர்களை சாப்பிடுகிறார்கள்.

வெளியிணைப்புகள்[தொகு]