ஹேமலதா மான்சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹேமலதா மான்சிங் (பிறப்பு:20 பிப்ரவரி 1919) ஒடியா மொழி இலக்கிய எழுத்தாளரும் பெண் கவிஞரும் ஆவார்.[1]

குடும்பம்[தொகு]

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் ஜஜ்பூர் மாவட்டத்தின் பலிப்படா கிராமத்தில் 1919 பிறந்தார். பள்ளிப்படிப்பை ராவென்ஷா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். குறிப்பிடத்தக்க ஒடியா மொழி கவிஞரும் கல்வியாளருமான இவரது கணவரின் பெயர் மாயாதார் மான்சிங். இவரது மகன் லலித் மான்சிங். புகழ்பெற்ற பாரம்பரிய பாடகரான கோகுல சந்திரஸ்ரீசந்தன் என்பவரிடம் இசை பயின்றுள்ளார்.

எழுத்து மற்றும் இலக்கியப்பணி[தொகு]

2004 இல் “பிரியா பிரமா” என்ற பெயரில் அவரது நினைவு குறிப்புக் கவிதை நூல் வெளியிடப்பட்டது.[2] அதில் தனது கணவரிடம் அவர் வைத்திருந்த அன்பை கவிதை நடையில் வெளிப்படுத்தியுள்ளார். இந்த புத்தகமானது மூன்று கட்டங்களாக வெளிவந்துள்ளன. இந்த மூன்று கட்டங்களும் அவரது கணவரை மையப்படுத்தியும் கணவரிடம் தான் வைத்துள்ள அன்பு மற்றும் நெருக்கமான உறவு பற்றியும் திருமண வாழ்க்கை குறித்தும் விவரித்துள்ளார். ஒடிசாவில் பெண்கள் எழுதிய தனிப்பட்ட கதைகளில் அசாதாரணமான, வெளிப்படைத் தன்மையுடன், கணவருடனான தனது உறவை அதில் விவரிக்கிறார். 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி புவனேஸ்வரில் தனது 85 ஆவது வயதில் காலமானார் [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://peoplepill.com/people/hemalata-mansingh/
  2. http://odiabookbazar.com/index.php?route=product/product&product_id=5100
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-03-02. பார்க்கப்பட்ட நாள் 2020-03-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேமலதா_மான்சிங்&oldid=3573840" இலிருந்து மீள்விக்கப்பட்டது