ஹெல்லரின் சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹெல்லரின் சோதனை (Heller's test) என்பது ஒரு வேதிப்பரிசோதனை ஆகும். இது வலிமையான அமிலங்கள் வீழ்படிவாக்கப்பட்ட புரதங்களில் சிதைவை ஏற்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. செறிவூட்டப்பட்ட நைட்ரிக் அமிலம் இரண்டு அடுக்குகளை உருவாக்க சோதனைக் குழாயின் பக்கத்திலிருந்து ஒரு புரதக் கரைசலில் சேர்க்கப்படுகிறது. சோதனை நேர்மறையாக இருந்தால் இரண்டு அடுக்குகளுக்கு இடையில் ஒரு வெள்ளை வளையம் தோன்றும். [1] சிறுநீரில் புரதம் இருக்கிறதா என்று சோதிக்க ஹெல்லரின் சோதனை பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. [2] இந்த சோதனையை ஆஸ்திரிய வேதியியலாளர் ஜோஹான் ஃப்ளோரியன் ஹெல்லர் (1813-1871) கண்டுபிடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Dandekar (1 January 2004). Practicals And Viva In Medical Biochemistry. Elsevier India. p. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8147-025-6.

    - Nigam (1 April 2007). Lab Manual in Biochemistry: Immunology and Biotechnology. Tata McGraw-Hill Education. p. 152. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-061767-4.

    - Chawla (1 January 2003). Practical Clinical Biochemistry: Methods and Interpretations. Jaypee Brothers Publishers. p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8061-108-7.

    - A.C. Croftan. Clinical Urinology. Рипол Классик. p. 115. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-275-01265-3.
  2. Concise Colour Medical Dictionary. Oxford University Press. 25 February 2010. p. 335. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-955715-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெல்லரின்_சோதனை&oldid=3635248" இலிருந்து மீள்விக்கப்பட்டது