உள்ளடக்கத்துக்குச் செல்

ஹெல்லன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரேக்கத் தொன்மவியலில் படி, ஹெல்லன் (Hellen, (/ˈhɛlɪn/; பண்டைக் கிரேக்கம்Ἕλλην Hellēn) என்பவர் கிரேக்கர்களின் முன்னோடி ஆவார். இவரது பெயரே கிரேக்கத்தின் மற்றொரு பெயராகும். அதாவது கிரேக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அல்லது கிரேக்க பண்பாடு அல்லது கிரேக்க நாடு போன்றவற்றிற்க்கு "ஹெலனிக்" என்ற பெயரடை மூல ஆதாரம் ஆகும்.

தொன்மவியல்

[தொகு]

ஹெல்லன் என்பவர் டியூக்கோலியான் (அல்லது சில நேரங்களில் சியுசு ) மற்றும் பிர்ரா ஆகியோரின் மகனும் ஆம்ஃபிக்டியனின் சகோதரரும் ஆவார். நிம்ஃப் ஓர்சிஸ் மூலம் [1] இவர் ஏயோலஸ், சுதஸ் டோரஸ் ஆகிய மூன்று மகன்களுக்கும், செனோபாட்ரா என்ற ஒரு மகளுக்கும் தந்தையானார். [2] இல்லையெனில், பிரோனூசின் மகன் ஹெலன் என்றும், டியூகாலியன் மற்றும் பைராவின் மகன் என்றும் அழைக்கப்பட்டார். [3] [4]

எசியொடின் கேட்லாக்ஸ் ஆப் உமன் பட்டியலின் படி, இவரது மகன்கள் பேரன்களின் சந்ததியினரே கிரேக்கத்தின் முதன்மைப் பழங்குடியினரான: ஏயோலஸ், அயோலியன்ஸ், டோரஸ், டோரியன்ஸ், குசுதஸ், அக்கேயன்ஸ், அயோனியர்கள், அக்கேயஸ், அயன் ஆகியோராவர். [5]

சில கூற்றுகளின்படி, ஹெலன் டோட்டஸின் தந்தை நியோனஸின் தந்தையாக குறிக்கப்பட்டுள்ளார். [6]

துசிடிடீஸின் கூற்றுப்படி, [7] ஹெலனின் வழித்தோன்றல்கள் ஃபிதியாவின் கிரேக்கப் பகுதியைக் கைப்பற்றினர், பின்னர் தங்கள் ஆட்சியை மற்ற கிரேக்க நகரங்களுக்கும் பரப்பினர். அந்தப் பகுதிகளின் மக்கள் தங்கள் மூதாதையின் பெயரால் ஹெலினெஸ் என்று அழைக்கப்பட்டனர். ஹெலனெஸ் என்ற இனப்பெயர் ஓமரின் காலத்திலிருந்தே உள்ளது.

குறிப்புகள்

[தொகு]
  1. Apollodorus, Bibliotheca 1.7.3
  2. Scholia on Hellanicus fr. 124
  3. Hecateus fr. 1F13
  4. Gantz, Timothy (1993). Early Greek Myth: A Guide to Literary and Ancient Sources. London: Johns Hopkins University Press. pp. 167. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-4410-X.
  5. Hesiod, Ehoiai fr. 9 and 10(a)
  6. Stephanus of Byzantium, s.v. Dōtion
  7. Thucydides, History of the Peloponnesian War 1.3.2
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெல்லன்&oldid=3606891" இலிருந்து மீள்விக்கப்பட்டது