ஏய்சின் சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹெய்ஸ் சோதனை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஏய்சின் சோதனை (Hay's test) என்பது சிறுநீரில் உள்ள பித்தநீர் உப்புக்கள் இருப்பதை கண்டறிய பயன்படும் ஒரு வேதியியல் சோதனையாகும்[1]. இச்சோதனை ஏய்சு கந்தகப் பூ சோதனை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

செய்முறை[தொகு]

ஒரு சோதனைக்குழாயில் மூன்று மில்லிலிட்டர் அளவுக்கு சிறுநீர் எடுத்துக்கொண்டு அதில் கந்தகத் தூள் தூவப்படுகிறது. கந்தகத் தூள் [2] சோதனைக்குழாயின் அடிப்பகுதியில் மூழ்கினால் சோதனையின் முடிவு நேர்மறை என எடுத்துக் கொள்ளப்படுகிறது. பித்த உப்புக்கள் சிறுநீரின் பரப்பு இழுவிசையை குறைக்கும் என்பதால், கந்தகத் தூள் சோதனைக் குழாயின் அடிப்பகுதியில் மூழ்குவதற்குக் காரணமாகிறது.[3][4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏய்சின்_சோதனை&oldid=3087646" இலிருந்து மீள்விக்கப்பட்டது