ஹென்ரிக் ஆண்டர்சன் (இசைக்கலைஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹென்ரிக் ஆண்டர்சன்
பிறப்பு7 பெப்ரவரி 1966 (1966-02-07) (அகவை 58)
கோபனாவன், டென்மார்க்
இசை வடிவங்கள்ஜாஸ், கருநாடக இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர்
இசைக்கருவி(கள்)கித்தார்
இசைத்துறையில்1984–தற்போது வரை
இணைந்த செயற்பாடுகள்ஜான் மெக்லாக்லின், திரிலோக் குர்து, பீட் லாக்கெட்
இணையதளம்www.henrikandersenmusic.com

ஹென்ரிக் ஆண்டர்சன் ( Henrik Andersen ) (பிறப்பு: பிப்ரவரி 7, 1966) டென்மார்க்கைச் சேர்ந்த ஜாஸ் கித்தார் கலைஞரும், பாடகரும்-பாடலாசிரியரும, பல இசைக்கருவிவிகளை கையாளும் கலைஞரும், குரல் தாள கலைஞரும் ஆவார். இவரது இசைக்கருவிகளில் லிண்டா மன்சர் இவருக்காக உருவாக்கப்பட்ட ஐம்பத்திரண்டு சரங்கள் கொண்ட கித்தார் உள்ளது.

பின்னணி[தொகு]

ஆண்டர்சன் டென்மார்க்கின் கோபனாவனில் பிறந்து வளர்ந்தார். அங்குள்ள உள்ள ரிதம் இசைப் பள்ளியில் பட்டம் பெற்றார். பதினெட்டு வயதிலிருந்தே இவர் ஒரு கித்தார் கலைஞராகவும் பாடகராகவும் தொழில் ரீதியாக நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். இவர் திரிலோக் குர்து மற்றும் பீட் லாக்கெட் ஆகியோரிடம் கர்நாடக இசையை (இந்திய இசை) பயின்றார். பின்னர் அது இவரது இசையமைப்பில் ஒரு முக்கிய அங்கமாக மாறியது.[1]

இவர் பீட் பாக்ஸிங் மற்றும் கொன்னக்கோல் போன்ற குரல் தாள பாணிகளில் நிபுணத்துவம் பெற்றவர். மேலும் கொன்னக்கோல் மற்றும் கித்தார் கற்பித்துள்ளார்.

ஆண்டர்சனின் "மூன் ஓவர் தஞ்சை" என்ற பாடல் சிறந்த பாரம்பரியப் பாடலுக்கான விருதை வென்றது.[2]

நாடகக் கலைஞர்[தொகு]

ஆண்டர்சன் ஒரு நாடக கலைஞரும் ஆவார். இவர் டேனிஷ் நாடக நிறுவனங்களான டீட்டர் டாஸ்கன், டீட்டர் ரிஃப்ளெக்ஷன் மற்றும் பிரனார் டீட்டர்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து நடித்துள்ளார். நாடக நிறுவனத்திற்காக நாடங்களை எழுதி, அதற்கு இசையமைத்துள்ளார். இவர் ஒரு தொழில்முறை கேலிச்சித்திரம் கலைஞர்.

சான்றுகள்[தொகு]

  1. "About HENRIK ANDERSEN". henrikandersenmusic.com. பார்க்கப்பட்ட நாள் 14 January 2017.
  2. "PRS Artist Roman Miroshnichenko Nominated In The 15th Independent Music Awards". PRS Guitars. 20 October 2016. பார்க்கப்பட்ட நாள் 5 May 2017.

வெளி இணைப்புகள்[தொகு]