உள்ளடக்கத்துக்குச் செல்

ஹூது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹூது
هود
ஆது சமூகத்தினருடன் ஹூது
பிறப்புஆது
கல்லறைநபி ஹூது அடக்கத்தலம்(கப்ர்)

ஹுது (Hud, அரபு மொழி: هود‎) ,இசுலாமில் கடவுள் அல்லாஹ்வின் இறைதூதர் என அறியப்படுகிறார்.இஸ்லாமிய கோட்பாட்டின் படி ஒவ்வொரு இஸ்லாமியரும் இறைவனின் தூதரையும் இறைத்தூதர்களையும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று திருகுரானில் கூறப்பட்டுள்ளது, இதில் ஹுது (அலை) அவர்களும் அடக்கம்.திருகுரானில் 11 வது அத்தியாயம் ஹுது(அலை) பெயரில் உள்ளது.[1]. [2] 'ஆது' சமூகத்தினர்க்கு நபி ஹுது (அலை) அவர்களை இறை தூதராக இறைவன் அனுப்பி வைத்ததாக இசுலாமியரின் நமபிக்கையாகும்.[3].

ஆது சமூகம்

[தொகு]

நபி நூஹ் (அலை) அவர்களின் சமுதாயத்தினருக்கு பின் தோன்றியது 'ஆது' சமூகத்தினர். அவர்களுக்கு நபி ஹூத் (அலை) அவர்களை இறை தூதராக இறைவன் அனுப்பி வைத்தான், அந்த சமூகத்தார்கள் மிக நேர்தியான மாளிகைகள், அமைப்பதில் வல்லமை பெற்று விளங்கினர்,தங்களின் வலிமையை நினைத்து பெருமை கொன்டவர்களாக இருந்தனர். திருகுரானில் "ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்? என்று கூறினார்கள்"[4].என்று ஆது சமூகம் பற்றி கூறப்பட்டுள்ளது.

நபி ஹூத் (அலை) அவர்கள் இறைவன் ஒருவனே அவனையே நீங்கள் வணங்க வேண்டும் என்ற ஓர் இறை கொள்கையை அச்சமுதாய மக்களிடம் எடுத்துரைத்த போது. அவர்கள் அதை ஏற்க வில்லை. [5].

ஆது சமூகத்தின் அழிவு

[தொகு]

'ஆது' சமூகத்தினர், பேரிரைச்சலைக் கொண்ட வேகமான காற்றில் ( புயலில்) சிக்கி சிதைந்து , மண்ணோடு மண்ணாக மறைந்து போனர்.[6]. [7].

உபர் நகரம்

[தொகு]
மண்ணில் புதையுண்ட உபர் நகரம்

ஆது சமுதாயத்தினர் வாழ்ந்த புதையுண்ட நகரம் இரம் நகரம் ஆகும்.அது தற்போது உபர் என்றழைக்கப் படுகிறது.[8] உலகில் அழிந்து போன நகரங்களில் உபர் நகரமும் ஒன்றாகும்.

உபர் நகர அகழ்வாராய்ச்சி

[தொகு]

நிக்கோலஸ் க்லாப் என்ற தொல்பொருள் ஆரய்ச்சியாளர் ஆது சமூகத்தார் வாழ்ந்த உபர் நகரை கண்டுபிடித்தார். அகழ்வாராய்ச்சிக்காக தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)( NASA) மூலம் குறுப்பிட்ட அந்த பகுதியை செயற்கைகோள் உதவியுடன் படம் பிடிக்கப்பட்டது. பின் கலிபோர்னியாவில் உள்ள ஹன்டிக்டன் நூலகத்தில் பழமையான வரைபடங்கள்(map) மற்றும் அதற்கான விளக்கங்கள்(manuscripts) பற்றி ஆராயப்பட்டதில் கி.பி 200ம் ஆண்டு கிரீசு-எகிப்து புவியியல் வல்லுனர்களால் வரையபட்ட வரைபடம் கிடைத்தது.இதை வைத்து அந்த நகரம் தோண்டும் பணி நிறைவடைந்த நிலையில் ஆது சமுகத்தினர் வாழ்ந்த 'இரம்' என்ற உபர் நகரம் கண்டறியபட்டது. தோண்டி எடுக்கபட்ட நகரம் 12 மீட்டர் அழமான மணல் அடுக்குகளால் மூடபட்டு இருந்ததை ஆய்வாளர்கள் கணகிட்டுள்ளனர்.தோண்டி எடுக்கபட்ட 'இரம்' நகரில் உயரமான தூண்கள் மற்றும் கோபுரங்கள் இருந்தன. [9].[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. திருக்குர்ஆன் 11:50–60
  2. Saniyasnain Khan, 2008, ' The Story of the Prophet Hud, Goodword Books பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8178-98464-4
  3. திருக்குர்ஆன் 11:50
  4. திருக்குர்ஆன் 41:15
  5. திருக்குர்ஆன் 7:69
  6. Saniyasnain Khan, 2001, ' The Prophet Hud and the Storm , Goodword Books பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8178-98176-9
  7. திருக்குர்ஆன் 54:18
  8. Noegel, Scott B (2010). The A to Z of Prophets in Islam and Judaism. Scarecrow Press. p. 151. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-7603-3. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help)
  9. Nicholas Clapp, The Road to Ubar: Finding the Atlantis of the Sands, Houghton Mifflin (1999),பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-395-95786-9.
  10. Ranulph Fiennes, Atlantis of the Sands: The Search for the Lost City of Ubar, Bloomsbury (1992), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0747513279
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹூது&oldid=3907944" இலிருந்து மீள்விக்கப்பட்டது