ஹுண்ட்ரு அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹுண்ட்ரு அருவி
Map
அமைவிடம்ராஞ்சி மாவட்டம், சார்க்கண்டு, இந்தியா
ஆள்கூறு23°27′00″N 85°39′00″E / 23.4500°N 85.6500°E / 23.4500; 85.6500[1]
ஏற்றம்456 மீட்டர்கள் (1,496 அடி)[2]
மொத்த உயரம்98 மீட்டர்கள் (322 அடி)
நீர்வழிசுவர்ணரேகா ஆறு
ஹுண்ட்ரு அருவி

ஹுண்ட்ரு அருவி (Hundru Falls), இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தில் ராஞ்சி மாவட்டத்தில் அமைந்துள்ள அருவியாகும். இது இந்தியாவின் 34 வது மிக உயர்ந்த அருவியாகும்.[3] இது இப்பகுதியில் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும்.[4]

அமைவிடம்[தொகு]

சுவர்ணரேகா ஆற்றின் வழித்தடத்தில், 98 மீட்டர்(322 அடி) உயரத்தில் இருந்து விழும் ஹுண்ட்ரு அருவி, மாநிலத்தின் மிக உயரமான அருவியாக உள்ளது. நீர் விழும் உயரத்தின் கண்கவர் காட்சி, பார்க்க மதிப்பானது என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து விழும் நீரின் வீழ்ச்சியால் பாறைகள் அரிப்பேற்பட்டு வெவ்வேறு விதமாக காணப்படுவது, இந்த இடத்திற்கு மேலும் அழகூட்டுகிறது.[5][6][7]

ராஞ்சியின் உயரமான நிலற்பரப்பில் அமைந்த்துள்ள ஹுண்ட்ரு அருவி, இந்தப்பகுதியில் விழும் செங்குத்தான அருவிகளில் ஒன்றாகும்.[8] மழைக்காலத்தில் இது ஒரு வல்லமைமிக்க இடமாக இருக்கும், ஆனால் வறண்ட காலங்களில் இது ஒரு அற்புதமான சுற்றுலாத்தலமாக மாறும்.[9] ஹுண்ட்ரு அருவியின் அடிவாரத்தில் ஒரு குளம் உள்ளது, இது குளிக்கும் இடமாக இருக்கிறது.[5]

ஆற்றின் புத்துணர்வான வேக ஓட்டத்தினால் ஏற்படும் சரிவான இடைவெளிக்கு(Knick Point), ஹுண்ட்ரு அருவி ஒரு சிறந்த உதாரணமாகும். ஆற்றின் கொந்தளிப்பான புத்துணர்வான ஓட்டத்தினால் மண்ணரிப்பு ஏற்பட்டு, ஆற்றின் நீண்ட நெடிய சமதள ஓட்டத்தில் சரிவான இடைவெளி(Knick Point) ஏற்படுகிறது. இந்த சரிவான இடைவெளி நீரை செங்குத்தாக விழ வைக்கிறது, இதனால் அருவி உருவாகிறது.[10]

போக்குவரத்து[தொகு]

பிரதான சாலையான புருலியா சாலையில் இருந்து சுமார் 21 கிலோமீட்டர் (13 மைல்) பயணம் செய்ய வேண்டும்.[7][11]

ராஞ்சியில் இருந்து குறுக்குவழி மற்றும் எளிய நான்கு வழிச்சாலையைப் பயன்படுத்தி ஓர்மன்ஜி மற்றும் சிக்கிதிரி வழியாக ஹுண்ட்ருவை அடையலாம். இந்த சாலையில் இருந்து 39 கிலோமீட்டர் (24 மைல்) தூரத்தில் உள்ளது, இது சாதாரண சாலையை விட 6 கிலோமீட்டர் (3.7 மைல்) குறைவானதாகும்.

அருவியின் கீழே அமைந்துள்ள சுவர்ணரேகா நீர்மின்சக்தி நிலையமும் சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு சிறந்த இடமாகும்.[7]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஹுண்ட்ரு, India Page". Falling Rain Genomics. பார்க்கப்பட்ட நாள் 2010-04-20.
  2. "Hundru, State Of Jharkhand, India". travelsradiate.com. Archived from the original on 2013-01-05. பார்க்கப்பட்ட நாள் 2012-02-12.
  3. "Showing all Waterfalls in India". World Waterfalls Database. Archived from the original on 2012-08-25. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.
  4. "Jharkhand Tourism | Major Destinations and Attraction | How to Reach" (in en-US). Travel News India. 2016-08-07. http://travelnewsindia.com/jharkhand-tourism-major-attraction/. 
  5. 5.0 5.1 "Hundru Falls Ranchi". Maps of India. பார்க்கப்பட்ட நாள் 2010-04-20.
  6. "The other side of this industrial city". The Hindu Business Line, 28 July 2003. பார்க்கப்பட்ட நாள் 2010-04-20.
  7. 7.0 7.1 7.2 "Hundru Falla". District administration. Archived from the original on 2010-01-24. பார்க்கப்பட்ட நாள் 2010-04-20.
  8. Bharatdwaj, K. (2006). Physical Geography: Hydrosphere By K. Bharatdwaj. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788183561679. https://books.google.com/books?id=T1Y_Ytx9wp4C&q=hundru+falls&pg=PA161. பார்த்த நாள்: 2010-04-20. 
  9. "Places of interest". Archived from the original on 2011-04-06. பார்க்கப்பட்ட நாள் 2010-04-20.
  10. A.Z.Bukhari (2005). Encyclopedia of nature of geography. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788126124435. https://books.google.com/books?id=Iz_m9dlXEUYC&q=Odda+Falls&pg=PA110. பார்த்த நாள்: 2010-07-11. [தொடர்பிழந்த இணைப்பு]
  11. Sir John Houlton, Bihar, the Heart of India, p. 144, Orient Longmans, 1949
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹுண்ட்ரு_அருவி&oldid=3846567" இலிருந்து மீள்விக்கப்பட்டது