ஹியாங் தன்னபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ꯍꯤꯌꯥꯡ ꯇꯥꯟꯅꯕ꯲.jpg

ஹியாங் தன்னபா என்பது இந்தியாவின் மணிப்பூர்மாநிலத்தில் கொண்டாடப்படும் படகுத்[1] திருவிழாவாகும். இது மனிப்பூர் மாநிலத்தின் மெய்டேய் மக்களால் கொண்டாடப்படும் லாய் ஹரௌபா எனும் திருவிழாவின் ஒரு பகுதியாகும்.[2][3]. பொதுவாக தங்கபத் உள்பட பல இடங்களில் நவம்பர் மாதத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது. ஹியாங் ஹிரென் என்று அழைக்கப்படும் இப்படகுகள் தெய்வநிலை சார் சக்திகளைக் கொண்டவையாகக் கருதப்பட்டு, சமய சடங்குளக்கு உட்பட்டு இவ்விளையாட்டு நடத்தப்படுகிறது.[4] தீய சக்திகளிடமிருந்து ஹிராயங் ஹிரென் காக்கும் என்ற நம்பிக்கையின் படி மெய்டெய் மக்கள் இதை வழிபடுகின்றனர்.

படகி 'ஹீ' என்றும் துடுப்பானது 'நௌ' என்றும் அறியப்படுகின்றன. வழக்கமாக இரண்டு படகுகள் மட்டுமே போட்டியில் பங்கேற்கும். இருப்பினும், சில நேரங்களில் பல அழகாக அலங்கரிக்கப்பட்ட படகுகளையும் இந்த விளையாட்டில் பங்கேற்பதைக் காணலாம். படகின் பரிமாணங்கள் மாறுபடும். படகில் குறைந்தபட்சமாக 20 மாலுமிகள் தொடங்கி எத்தனை மாலுமிகள் வேண்டுமானாலும் ஏற்றிச் செல்லலாம். சனாமாஹி கடவுளுக்குச சடங்குகள் செய்தபின் போட்டி தொடங்குகிறது. லைனிங்தௌ சனாமஹி[5] ஒவ்வொரு மணிப்பூரி குடும்பத்தையும் ஆளும் தெய்வமாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பு தரும் கடவுளாக இத்தெய்வம் வணங்கப்படுகிறது. விளையாட்டின் உள்ளார்ந்த பகுதியாக இருக்கும் ஆதரவாளர்கள், மணிப்பூரி மொழியில் ஹிபன் சென்பா அல்லது கோங்பன் சென்பா என்று அழைக்கப்படுகிறார்கள்.[6][7]

ஹியாங் தன்னாபா திருவிழா காங்லீபாக் இராச்சியத்தில் நோங்டா லைரன் பகாங்பா (கி.பி. 33) காலத்திலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. [8]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Garg, Chitra (November 10, 2007). Travel India: A Complete Guide to Tourist. Lotus Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788183820844. https://books.google.com/books?id=tSduAAAAMAAJ&q=hiyang+tannaba. 
  2. Students' Britannica India: Select essays. Encyclopaedia Britannica (India). November 10, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780852297629. https://books.google.com/books?id=G_RtAAAAMAAJ&q=hiyang+tannaba. 
  3. "sports.indiapress.org".
  4. Chatterjee, Suhas (November 10, 2000). A Socio Economic History of South Assam. Printwell Publishers Distributors. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170445180. https://books.google.com/books?id=ikluAAAAMAAJ&q=hiyang+tannaba. 
  5. https://en.wikipedia.org/wiki/Lainingthou_Sanamahi
  6. http://www.traditionalsports.org/traditional-sports/asia/hiyang-tannaba-manipur-india.html
  7. http://sports.indiapress.org/hiyang_tannaba.php
  8. (in en) Early Sunrise, Early Sunset: Tales of a Solo Woman Traveler Across North East and East India. 2019-05-13. https://books.google.com/books?id=mdmYDwAAQBAJ&dq=nongda+lairen+pakhangba&pg=PT95. 

மேலும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹியாங்_தன்னபா&oldid=3662431" இருந்து மீள்விக்கப்பட்டது