ஹால் விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃகால் விளைவு அல்லது ஹால் விளைவு விளக்கப்படம். மின்னோட்டம் பாயும் திசையை நீலநிறச் சுற்று காட்டுகின்றது. அதற்குச் செங்குத்தான திசையில் (மேலும் கீழுமாக Bz என்று காட்டப்பட்டுள்ள திசையில் காந்தப்புலம் செலுத்தப்படுகின்றது. இந்தக் காந்தப்புலனின் ஊடாக மின்சாரத்தைக் கடத்தும் எதிர்மின்னிகள் செங்குத்தான திசையில் பாய்வதால், இந்த எதிர்மின்னிகள் இவ்விரண்டு திசைக்கும் (மின்னோட்ட திசைக்கும், காந்தப்புலன் திசைக்கும்) செங்குத்தான் மூன்றாவது திசையில் உந்தப்பெறும். இந்த விசையின் விளைவால் எதிர்மின்னிகள் ஒருபுறமாக (கடத்தியின் இடப்புறமாக) ஒதுங்கும். எனவே கடத்தியின் இடவலமாக (மூன்றாவது திசையில்) ஓர் மின்புலம், ξy, தோன்றும். இதுவே ஃகால் (ஹால்) விளைவு என்பது. VH என்பது ஃகால் வோல்ட்டு (மின்னழுத்தம்).

ஹால் விளைவு (Hall efffect ) என்பது ஆற்றல் மிக்க காந்தப் புலத்திற்குச் செங்குத்தாக உள்ள ஒரு கடத்தியில் மின்சாரம் பாயும் போது, அவ்விரண்டிற்கும் செங்குத்தான திசையில் அக்கடத்தியில் ஒரு மின் அழுத்த வேறுபாடு தோன்றும் விளைவு. இது மின்னோட்டத்திற்குக் காரணமல்ல. இவ்விளைவு 1879 இல் எட்வின் ஹால் என்ற அமெரிக்க இயற்பியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது[1].

இதுபோன்ற மற்றோர் விளைவு நெர்ஸ்ட்- எட்டிங்காசன் ( Nerst- Ettinghausen effect) எனும் இரு அறிஞர்களால் 1886 ல் கண்டுபிடிக்கப்பட்டது.எனவே இப்பெயர் பெற்றது.ஒரு தட்டையான கடத்தும் பண்புடைய தகட்டின்இரு ஓரங்களுக்கிடையே ஒரு வெப்பச்சரிவு இருக்குமாறும் தகட்டின் பரப்பிற்கு செங்குத்தாக ஒரு காந்தப்புலம் செயல்படுமாறும் உள்ள நிலையில் மற்ற இரு ஓரங்களுக்கிடையே ஒரு மின் அழுத்த வேறுபாடு தோற்ற்விக்கப்படுகிறது.இது ஹால் விளேவில் தோன்றும் அளவினைவிட குறைந்தது..வெப்பமும் மின்சாரமும் கடத்தப்பட எலக்ட்ரான்களின் இயக்கமே காரணமாவதல் இதனை விளக்கமுடியும்.

EMF = QHdT/Dx*Dz.

மேற்கோள்கள்

Electricity and magnetism SS Starling ELBS

  1. Edwin Hall (1879). "On a New Action of the Magnet on Electric Currents". American Journal of Mathematics (American Journal of Mathematics, Vol. 2, No. 3) 2 (3): 287–92. doi:10.2307/2369245. http://www.stenomuseet.dk/skoletj/elmag/kilde9.html. பார்த்த நாள்: 2008-02-28. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹால்_விளைவு&oldid=3229987" இலிருந்து மீள்விக்கப்பட்டது